திருவரங்கத்தந்தாதி 30 ஆராத நஞ்சு உள்ள கண்டனே ஆராதநம் செய்யும்போது நான் யார் ?
ஆராதனஞ்செய்துகண்டனின்கீர்த்தியறைவன்றிரு ஆராதனஞ்செய்வன்வேதாவென்றாலடியேன்புகழ்கைக்கு
ஆராதனஞ்செய்யபோதாந்திருமகளாகபல்பூண்
ஆராதனஞ்செயன்பாகாவரங்கத்தமர்ந்தவனே
பதவுரை :
செய்ய போது செந்தாமரை மலரை
ஆதனம் ஆம் இருப்பிடமாகக் கொண்ட
திருமகள் மஹாலக்ஷ்மியை
ஆக மார்பில் உடையவனே !
பல் பூண் ஆரா பல ஆபரணங்களையும், மாலையும் தரிப்பவனே !
தனஞ்செயன் பாகா அர்ஜுனனின் சாரதியே !
அரங்கத்து அமர்ந்தவனே ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ளவனே !
ஆராத நஞ்சு கொடிய விஷத்தை
எய்து கண்டன் கழுத்தில் உடைய சிவனும்
நின் கீர்த்தி அறைவன் உன் புகழைப் பாடுவான் !
வேதா பிரமனும்
திரு ஆராதனம் செய்வன் உன்னை பூஜை செய்வான் !
என்றால் அப்படியானால்
அடியேன் புகழ்கைக்கு ஆர் உன்னைத் துதிப்பதற்கு எனக்கு என்ன தகுதி ?