திருவரங்கத்தந்தாதி 26 அரங்கன் அடியன் என்று நினை !
ஆதவனந்தரந்தோன்றாமற்கன்மழையார்த்தெழுநாள்
ஆதவனந்தரவெற்பெடுத்தானடியார்பிழைபார்-
ஆதவனந்தரங்கத்தானரங்கனடியனென்றுள்-
ஆதவனந்தரங்கண்டீர்வினைவந்தடைவதுவே.
பதவுரை :
ஆதவன் சூரியன்
அந்தரம் ஆகாயத்தில்
தோன்றாமல் தெரியாதபடி
கல் மழை ஆலங்கட்டி மழை பொழியும் மேகங்கள்
ஆர்த்து எழு நாள் ஆர்ப்பரித்து கொண்டு வந்தபோது
ஆ பசுக்கள்
தவனம் தர தவிப்பு அடைந்ததால்
வெற்பு எடுத்தான் கோவர்த்தன கிரியை குடையாய் பிடித்தவனும் ,
அடியார் தனது பக்தர்கள் செய்யும்
பிழை பாராதவன் குற்றத்தைப் பார்க்காதவனும் ,
அம் தரங்கத்தான் அழகிய அலைகளை உடைய கடலில் பள்ளி கொண்டவனுமான
அரங்கன் அடியன்"ரங்கநாதனுக்கு தொண்டன் நான்"
என்று உள்ளாத அனந்தரம் என்று நினைக்காத பின்னே
வினை வந்து அடைவது அவன் செய்த கருமம் அவனிடம் வரும்.
கண்டீர் பாரீர் !