Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 21 நம் அரங்கனுக்கு நமன

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 21 நம் அரங்கனுக்கு நமன

    திருவரங்கத்தந்தாதி 21 நம் அரங்கனுக்கு நமன் அஞ்சும் !


    நரகந்தரம்புவியிம்மூன்றிடத்துநனிமருவு
    நரகந்தரங்கித்துவெங்காலற்கஞ்சுவர்நாயகவா
    நரகந்தரம்புட்பிடரேறரங்கர்நல்லாய்க்குலத்தி
    நரகந்தரங்கமற்றரடியார்க்குநமனஞ்சுமே



    பதவுரை :


    நரகு நரகம் ,
    அந்தரம் சுவர்க்கம் ,
    புவி பூமி
    இம்மூன்று இடத்தும் இந்த மூன்று உலகங்களிலும்
    நனி மருவுநர் நன்கு வாழ்பவர்கள்
    அகம் தரங்கித்து மனம் கலங்கி
    வெம் காலற்கு கொடிய யமனுக்கு
    அஞ்சுவர் பயப்படுவார்கள் .
    நாயக வானர சிறந்த வானரமான ஹனுமானுடைய
    கந்தரம் கழுத்தின் மேலும் ,
    புள் பிடர் ஏறு கருடனுடைய பிடரியின் மேலும் ஏறும்
    அரங்கர் ரங்கநாதனும் ,
    நல ஆய்க்குலத்து சிறந்த இடையர் குலத்திற்கு
    இனன் சூரியன் போன்றவரும,

    தரங்கம் திருப்பாற்கடலை
    அகம் உற்றார் வசிக்குமிடமாய் கொண்டவருமான நம் பெருமாளுடைய
    அடியார்க்கு தொண்டர்களுக்கு
    நமன் அஞ்சும் யமன் பயப்படுவான் !
    Last edited by sridharv1946; 15-06-13, 17:21.
Working...
X