Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 17 அரங்கா அடியேன் உன் 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 17 அரங்கா அடியேன் உன் 

    திருவரங்கத்தந்தாதி 17 அரங்காஅடியேன் உன் அடைக்கலம் !

    அரங்காதுவார்கணை கண்வள்ளைகோங்கினரும்புமங்கை
    அரங்காதுவார்முலையென்றைவர்வீழ்ந்தனராடரவின்
    அரங்காதுவாரமிலாமணியேயணியார்மதில்சூழ்
    அரங்காதுவாரகையாயடியேனுன்னடைக்கலமே


    பதவுரை :

    மங்கையர் இளம்பென்களுடைய
    அரம் காது வார் கணை அரத்தால் அராவப்பட்ட அம்பு போன்ற
    கண் கண்களையும்
    வள்ளை வள்ளைக்கொடியின் இலை போன்ற
    ம் காது அழகிய காதுகளையும்
    கோங்கின் அரும்பு கோங்க மரத்தின் அரும்பு போன்ற
    வார் முலை கசசிறுக்கிய கொங்கைகளையும்
    என்று நினைத்து
    ஐவர் ஐந்து இந்திரியங்கள்
    வீழ்ந்தனர் விழுந்தன.
    ஆடு அரவு படம் எடுத்து ஆடும் காளியன் எனும் பாம்பை
    இன் அரங்கா இனிய அரங்கமாக்கி நடனம் ஆடியவனே !
    துவாரம் இலா மணியே முழுமையான மாணிக்கமே !
    அணி ஆர் மதில் சூழ் அழகிய மதில்களால் சூழப்பட்ட
    அரங்கா திரு அரங்க நாதனே !
    துவாரகையாய் துவர்ரகையில் வசித்தவனே !
    அடியேன் உன் அடைக்கலம் நான் உனக்கு அடைக்கலம் !
    Last edited by sridharv1946; 12-06-13, 14:56.
Working...
X