திருவரங்கத்தந்தாதி 9 அரங்கனே ! அடியேனை அடிமையாக ஏற்று அருள் !
கைக்குஞ்சரமன்றளித்தாய் அரங்கமண் காக்கைக்கும் மாயக்
கைக்குஞ்சரமசரம் படைத்தாய் கடல்நீறெழத்து
கைக்குஞ்சரமகரக்குழையாயெனைக்கைக்கொளுடல்
கைக்குஞ்சரமதசையிலஞ்சேலென்றென் கண்முன்வந்தே
பதவுரை : அரங்கனே ! அடிமையாக ஏற்று அருள் !
கைக்குஞ்சரம் கஜேந்திரனை
அன்று முன்பு
காத்தாய் காத்து அருளியவனே !
அரங்க ரங்கநாதனே !
காக்கைக்கும் காப்பதற்கும்
மாய்க்கைக்கும் அழிப்பதற்கும்
மண் உலகத்தில்
சரம் அசரம் இயங்குவதையும் இயங்காததையும்
படைத்தாய் உண்டாக்கினாய் !
கடல் நீறு எழ கடல் வறண்டு புழுதி படும் படி
துகைக்கும் அதனை வருத்தத்தொடங்கிய
சர ஆக்னெயாஸ்திரம் உடையவனே !
மகரக்குழையாய் மகர குண்டலங்கள் அணிபவனே !
உடல் எனது சரீரத்தை
கைக்கும் ஒழிக்கும்படியான
சரம தசையில் கடைசி காலத்தில்
என்கண்முன் வந்தே எனது கண்ணெதிரில் தோன்றி
அஞ்சேலென்று அஞ்சாதே என்று அபயம் அளித்து
எனைக்கைக்கொள் என்னை அடிமையாக ஏற்று அருள் !