Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கதந்தாதி 7 நரகத்தைத் தவிர்க்க எĪ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கதந்தாதி 7 நரகத்தைத் தவிர்க்க எĪ

    திருவரங்கதந்தாதி 7 நரகத்தைத் தவிர்க்க என்ன வழி ?





    தாளத்தனத்தத்தைச்சொல்லியரால்வருந்தாழ்மலபா
    தாளத்தனத்தத்தைத்தப்பநிற்பீர்புடைதங்கியவே
    தாளத்தனத்த்தைத்தீர்த்தானரங்கன்சகடுதைத்த
    தாளத்தனத்தத்தையாயுதன்பாதந்தலைக்கொண்மினே

    பதவுரை :

    தாளம் தனம் கைத்தாளம் போன்ற உருவமுள்ள கொங்கைகளையும்
    தத்தை சொல்லியரால் கிளி போன்றஇனியபேச்சையுமுடையவர்களால்
    வரும் உண்டாகும்
    தாழ் மல தாழ்ந்த, அழுக்குள்ள
    பாதாளத்து நரகத்து
    அனத்தத்தை துன்பத்தை
    தப்ப நிற்பீர் தவிர்க்க விரும்புபவர்களே !
    புடை தங்கிய சூழ்ந்து நின்ற
    வேதாளத்தன் பூத் கணங்களை உடைய சிவனது
    அத்தத்தை பிச்சை எடுத்தலாகிய துன்பத்தை
    தீர்த்தான் போக்கியவனும்,
    சகடு உதைத்த சகடாசுரனை உதைத்த
    தாள் அத்தன் திருவடிகளை உடையவனும்
    அத்தத்து கைகளில்
    ஐ ஆயுதன் ஐந்து ஆயுதங்களை உடையவனுமான
    அரங்கன் ரங்க நாதனுடைய
    பாதம் திருவடிகளை
    தலைக்கொண்மின் தலை மேல் வைத்து வணங்குங்கள் !



Working...
X