Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 4 அரங்கனிடம் சரண் அட&am

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 4 அரங்கனிடம் சரண் அட&am

    திருவரங்கத்தந்தாதி 4 அரங்கனிடம் சரண் அடையாதவர்கள் கதி ?




    தந்தமலைக்குமுன்னின்றபிரானெதிர் தாக்கிவெம்போர்
    தந்தமலைக்குமைத்தானரங்கேசன்றண்பூவினிடைத்
    தந்தமலைக்குத்தலைவன் பொற்பாதஞ்சரணென்றுய்யார்
    தந்தமலைக்கும் வினையானைவார்பலர் தாரணிக்கே




    தாரணிக்கு பூமியில்
    பலர் பலர்
    தந்தம் மலைக்கு தந்தம் உடைய மலை போன்ற கஜேந்திரனுக்கு
    முன் நின்ற பிரான் எதிரில் காட்சி கொடுத்த பெருமானும் ,
    எதிர் தாக்கி எதிர்த்து மோதி
    வெம் போர் தந்த கொடிய போரிட்ட
    மலை குமைத்தான் (கம்சனது) மல்லர்களை அழித்தவனும் ,
    தண் பூவின் குளிர்ச்சியான தாமரையில் இருப்பவளும்
    தந்து இடை நூல் போல் மெல்லிய இடை உடையவளும்
    அமலைக்கு குற்றமற்றவளுமான திருமகளுக்கு
    தலைவன் கணவனுமான
    அரங்கேசன் ஸ்ரீ ரங்கநாதனுடைய
    பொன் பாதம் அழகிய திருவடிகளை
    சரண் என்று சரணமாக அடைந்து
    உய்யார் உய்வு பெறாதவர்களாய்
    அலைக்கும் வருத்துகின்ற
    தம் தம் தங்களது
    வினையால் பூர்வ கர்மங்களால்
    நைவார் வருந்துவார்கள்


Working...
X