28 : மறப்பேனோ ?
இருளினும் , வெளியினும் (இரவிலும் பகலிலும் )
மருளினும் , தெருளினும் (மயக்கத்திலும்,தெளிவிலும்)
இன்பமே அடையினும்
துன்பமே மிடையினும் (மிடை - மிகுதல்)
ஒருவர் முன்பு புகழினும்
இருவர் பின்பு இகழினும்
ஊன் இறந்து அழியினும்
யான் மறந்து அழிவனோ ?
சுருதி நின்று ஓலிடும் (வேதங்கள் புகழும்)
கரதலம் நாலொடும்
துவளும் நூல் மார்பமும் (நூல் - முப்புரி நூல்)
பவள வாய் மூரலும் (மூரல் - முறுவல்)
திரு அரங்கேசர் தம்
சுருள் கருங்கேசமும்
செய்ய நீள் முடியும் (செய்ய -அழகிய)
அத்துய்ய சேவடியுமே ! (துய்ய - தூய)

Comment