Announcement

Collapse
No announcement yet.

தமிழில் அச்சேறிய முதல் நூல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தமிழில் அச்சேறிய முதல் நூல்

    தமிழில் அச்சேறிய முதல் நூல்

    லிஸ்பன் நகரில் 1554இல் அச்சிடப்பட்ட கார்த்தில்யா (Carthilha) என்ற நூலே முதல் தமிழ் நூல் என்பர்.
    இந்நூலில் தமிழ் எழுத்துகள் கையாளப்படாமல் உரோமருடைய எழுத்துகள் தமிழ் ஒலிகளைக் குறிப்பதற்குக் கையாளப் பெற்றிருந்தன. இது 36 பக்கங்களை உடையது. இந்த உரைநடை நூலில் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தின் வழிபாட்டு முறைகளும், செபங்களும் அடங்கியுள்ளன.

    ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் (1520–1600):இவர் ஒரு போர்த்துகீசிய மத போதகர். தமிழில் நூல்களை அச்சடிக்க என தொடக்க காலத்தில் அச்சுக் கூடத்தினை நிறுவி தமிழில் நூல்களை அச்சிட்டவர். 1578 ஆம் ஆண்டிலேயே தம்பிரான் வணக்கம் என்ற நூலினை அச்சில் வெளியிட்டவர். கிரிசித்தியாணி வணக்கம் என்ற நூலினையும் கொண்டு வந்தவர்.

    கி.பி.1679ஆம் ஆண்டில் அந்தோணி பிரயோன்சா அடிகளார் போர்த்துகீசிய-தமிழ் அகராதியை உருவாக்கினார். வீரமா முனிவர் சதுரகராதியை 1732இல் வெளியிட்டார். மேலும் அவர் தமிழ்-லத்தீன் அகராதி, போர்த்துகீசியம்-தமிழ்-லத்தீன் அகராதி ஆகியவற்றையும் வெளியிட்டார்.

    ப்ரஹ்மண்யன்
    பெங்களூரு

    Attached Files
Working...
X