48. இது முதற் பதினான்கு கவிகள் - விராதன் துதி.
வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன நின்
பாதங்கள் இவையென்னில் படிவங்கள் எப்படியோ
ஓதங்கொள் கடலன்றி ஒன்றினோ ஒன்றொவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ.
(இ-ள்) வேதங்கள் - எல்லா வேதங்களாலும், அறைகின்ற - துதிக்கப்படுகின்ற, இவை - இந்த, நின் பாதங்கள் - உனது திருவடிகளே, உலகு எங்கும் - உலகமுழுவதும், விரிந்தன என்னின் -
பரந்தனவென்றால், படிவங்கள் - மற்றைத் திரு அவயவங்கள், எப்படியோ - எத்தன்மையனவோ? ஓதம் கொள் - குளிர்ச்சியைக் கொண்ட, கடல் அன்றி - கடலில் மாத்திரமேயல்லாமல், ஒன்றினோடு ஒன்று ஒவ்வா -
ஒன்றோடொன்று (தம்மில்) ஒத்திராத, பூதங்கள் தொறும் - மற்றைப் பூதங்களிலும், உறைந்தால் - (நீ) வாசஞ்செய்தால், அவை - அப் பூதங்கள், உன்னை --, பொறுக்குமோ - தாங்கவல்லனவோ? (தாங்கவல்லனவல்ல)Æ’
(எ-று.)
வேதங்களிற் கூறப்படுவதெல்லாம் எம்பெருமானது திருவடிகளின் பெருமையே யாதலால், „வேதங்களறைகின்ற… என்றான்Æ’ அறைகின்ற பாதங்கள் எனக் கூட்டுக. இனி, வேதங்கள் (சிலம்பு போல்) ஒலிக்கின்ற பாதங்களென்றுமாம். தனது அருகிலிருத்தல்பற்றி, „இவை… என்று சுட்டினான். „உலகெங்கும் விரிந்தன… என்றது, திரிவிக்கிரமாவதாரதக் கதையையுட்கொண்டு. „படிவங்களெப்படியோ… என்றது - உனது
திருமேனி இத்தன்மைத்தென்று உத்தேசித்து அறிய முடியா தென்றபடி.
‘தன் படிக்குக் காற்கூறும் போராதத்தையிறே அமுது செய்ததுÆ’ திருவடிக்கு அளவான பூமியை அமுது செய்து†என்ற ஈட்டையும் ஈண்டு ஒருசார் ஒப்பு நோக்குக. ஓதம் - வெள்ளமும் அலையுமாம், பூதங்கள் -
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்பன. நிலம் - நிலையாயிருத்தலும், கந்தமுடையதாதலும்Æ’ நீர் - பாய்ந்தோடுதலும், குளிர்ந்த பரிசமுடையதாதலும்Æ’ தீ - மேல்நோக்கி யெரிதலும், சுடும்
பரிசமுடையதாதலும்Æ’ காற்று - பத்துத் திசைகளிலும் வீசுதலும், உருவமின்றிப் பரிசமுடையதாதலும்Æ’ விசும்பு - எங்கும் பரவியிருத்தலும், சப்தகுணமுடையதாதலுமாகிய தன்மை ழூழூழூ வேறுபாடுகளைப் பற்றி,
„ஒன்றினோடொன்றொவ்வாப் பூதங்கள்… என்றது. ‘மாகடல் நீருள்ளான்†என்றவாறு பஞ்சபூதங்களுள் ஒன்றன் சொரூபமான கடலில் மாத்திரமேயன்றி, மற்றைய பூதங்களிலும் நீ உறைந்தால், அவை உன்னைப்
பொறுக்க வல்லன வல்ல என்றது, அவற்றையும் நீயே தாங்குகிறாய் என்பது தோன்றற்கு. „பூதம்… என்கிற சொல்லாற்றலால், விநோதமாகக் காட்டப்படுஞ் சடைப்பூதங்களினுட் புகுந்த மனிதனே அவற்றைத் தாங்கிச்
செலுத்துதல்போல, ஐம்பெரும்பூதங்களி னுள்ளுறைகின்ற நீயே அவற்றைத் தாங்குகிறாயென்பது தோன்றுமாறு காண்க. „ஓதங்கொள் கடலன்றி… எனக் கடலிலுறைதலைத் தனியே எடுத்துக் கூறியது -
திருப்பாற்கடலில் திருவநந்தாழ்வான்மேல் திருக்கண் வளர்தலும், பிரளயகாலத்துப் பெருங்கடலில் ஆலிலை மேற் பள்ளிகொண் டருளுதலுமாகிய விசேஷத் தன்மையை நோக்கி யென்றலும் உண்டு. „வேதங்க
ளறைகின்ற… என்றதனால் ஸகலவேதப் பிரதிபாத்யனாதலும், „உலகெங்கும் விரிந்தன… என்றதனால் ஸர்வவியாபியாதலும், „பாதங்களிவை… என்றதனால் பத்துடையடியவர்க் கெளியவனாதலும்,
„படிவங்களெப்படியோ… என்றதனால் மனமொழி மெய்களுக்கு எட்டாதவனாதலும், „ஓதங்கொள் கடலன்றி… என்றதனால் வியூகநிலைமையையும், „பூதங்கடொறு முறைந்தால்… என்றதனால்
ஸர்வாந்தர்யாமியாதலும், „அவை யுன்னைப் பொறுக்குமோ… என்றதனால் அனைத்துக்கும் ஆதாரமாதலும், ஸர்வ சக்த்pத்வமும் கூறப்பட்டன.
இங்குக் கூறிய பொருளில், படிவங்கள் என்பதற்கு - அவயவங்கள் என்ற பொருள் இலக்கணையாக அன்றி, நேரே இல்லாமையால், அங்ஙன் கூறாது, படிவங்கள் என்பதிலுள்ள „கள்… என்பதை
அசையாக்கி, படிவம் - திருமேனியென்று கூறுவதே பொருத்த மென்று கூறியுள்ளனர், இராமாயண சாரமுடையார். மற்றும், அறைகின்ற என்பதை முற்றாகவும் கொண்டுள்ளார். படிவம் என்பதற்கு உறுப்பு என்று நேரே பொருளில்லாவிட்டாலும், அவயவங்களின் வடிவங்கள் என்றே கூறின் இலக்கணைப் பொருள் கொள்ள வேண்டியதில்லை யென்றும், „கள்… அசையாக்க வேண்டுவதில்லையென்றும் எமக்குத் தோன்றுகின்றது.
„அறைகின்ற… என்று சொன்னோக்கில் பெயரெச்சமாத் தோன்றுவதை முற்றாக்குதலும் வலிந்து கூறுதலாகத் தோன்றுகின்றது.