Announcement

Collapse
No announcement yet.

பதினெண் கீழ்க்கணக்கு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பதினெண் கீழ்க்கணக்கு

    பதினெண் கீழ்க்கணக்கு (Pathinen Kezhkanakku)


    சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன.இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும்.

    பதினெண் கீழ்கணக்கு நூல்களை கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.



    இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

    1.அற நூல்கள்:

    காதலுக்கும்,வீரத்திற்கும் அற நெறிகளை வலியுறுத்திச் சொல்லப்பட்ட இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்பட்டன. மேலும் இவை வாழ்வு நூலாக போற்றப்படுகின்றன.

    இப்பிரிவில்,
    • 1.நாலடியார் (Naaladiyar)
    • 2.நான்மணிக்கடிகை (Naanmanikadikai)
    • 3.இனியவை நாற்பது (Iiniyavainarpadhu)
    • 4.இன்னா நாற்பது (Innanarpadhu)
    • 5.திரிகடுகம் (Thirikadugam)
    • 6.ஆச்சாரக் கோவை (Acharakovai)
    • 7.சிறுபஞ்சமூலம் (Sirupanchamoolam)
    • 8.முதுமொழிக்காஞ்சி (Mudhumozhikanchi)
    • 9.பழமொழி நானூறு (Pazhamozhinaanooru)
    • 10.ஏலாதி (Elathi)
    • 11.திருக்குறள் (Thirukural)

    ஆகிய பத்து நூல்களும்,

    2.அகப்பொருள் பற்றிய நூல்கள்:

    இப்பிரிவில்,
    • 1.கார் நாற்பது (Kaarnarpadhu)
    • 2.ஐந்திணை ஐம்பது (Iiynthinaiiympadhu)
    • 3.திணைமொழி ஐம்பது (Thinaimozhiiympadhu)
    • 4.ஐந்தினை எழுபது (Iynthinaiezhupadhu)
    • 5.திணைமாலை நூற்றைம்பது (Thinaimaalainootruiympadhu)
    • 6.கைந்நிலை (Kainilai)

    ஆகிய ஆறு நூல்களும்,

    3.புறப்பொருள் பற்றிய நூல்கள்:

    இப்பிரிவில்,
    • 1.களவழி நாற்பது (Kalavazhinarpadhu)

    ஆகிய ஒன்றும் அடங்கும்.


    நன்றி .- க.பா.சக்தி வேலன்.


  • #2
    Re: பதினெண் கீழ்க்கணக்கு

    டியர் சார்,
    இந்த 18 படல்களின் பெயரையும் சுலபமாக நினைவில் கொள்ள ஒரு பாட்டு உண்டு தற்போது நினைவில்லை அது இவ்வாறு தான் தொடங்கும் என நினைக்கிறேன் இனியவை நாற்பது இன்னாநாற்பது கார்நாற்பது களவழிநாற்பது ஐந்திணை முப்பால் கடுகம் கோவை...............எனவும் எட்டுத்தொகைக்கு .............அகம் புறம் இத்திறத்த எட்டுத்தொகை என முடியும் பாடலும் அது போல் பத்துப்பாட்டுக்கு ஒரு பாடலும் உண்டு தங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து அப்லோட் செய்யுங்களேன் நன்றி
    Last edited by soundararajan50; 16-04-13, 09:19.

    Comment

    Working...
    X