வைராக்கிய சதகம்
ராஜா பர்த்ருஹரி J.K. SIVAN
வைராக்கிய சதகம்
ஏதோ ஓதி வைத்தேனா ஊதி வைத்தேனா?
உஜ்ஜயினி ராஜா விக்கிரமாதித்தன் சரித்திரம் படைத்தவன். அவனைத்தெரியாத ஹிந்துவே கிடையாது. அவனுடைய அண்ணா தான் பர்த்ருஹரி. சிறந்த வேதாந்தி. கவிஞன். இன்பம் சுவைத்து விரும்பி வாழ்ந்த அரச போகத்தை உதறித்தள்ளி விட்டு சன்யாசியானவன் பர்த்ருஹரி . முன்னூறு பாடல்கள், அவன் எழுதி நமக்கு ஒரு புதையலாக விட்டுவிட்டு போயிருக்கிறான். அவை நூறு நீதி சதகம், நூறு சிருங்கார சதகம், நூறு வைராக்கிய சதகம் என்னும் சுபாஷித த்ரிசதி. உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவை இது. அவ்வப்போது நீதி சதகம் வைராக்கிய சதகம் எழுதிவருகிறேன். காலத்தால் அழியாத மேன்மை கொண்டவை இவை.
भ्रान्तं देशमनेकदुर्गविषमं प्राप्तं न किञ्चित्फलं
त्यक्त्वा जातिकुलाभिमानमखिलं सेवा कृता निष्फला ।
भुक्तं मानविवर्जितं परगृहेष्वाशंकया काकवत्
तृष्णे जृंभसि पापकर्मनिरते नाद्यापि संतुष्यसि॥
Bhraantam desamanekadurgavishamam praaptam na kinchitphalam
Tyaktwaa jaatikulaabhimaanamakhilam seva kritaa nishphalaa
Bhuktam maanavivarjitam paragriheshwaashankaya kaakavat
Trishne jrimbhasi paapakarmanirate naadyaapi santushyasi [5]
நான் சுற்றாத இடம் கிடையாது. எங்கெல்லாமோ அலைந்தேன். கல் முள் பள்ளம் மேடு, காடு நாடு ஒன்று பாக்கி இல்லை. என்னத்தை கண்டேன்? என்ன பிரயோஜனம்? என்ன சொன்னாலும் தட்டாமல் இரவு பகல் பார்க்காமல் வீடு, மானம் மரியாதை எதுவும் பார்க்காமல் அடிமையாக ராஜாவுக்கு சேவை, முதலாளி, எஜமானன், பணக்காரர்களுக்கு உழைத்தேன், சே. இதனால் என்ன பலன் அடைந்தேன்? தன்னை யாராவது ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயத்தோடு காக்கை அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு பயந்து கொண்டு சாப்பிடுவது போல் சோற்றை உண்டேன். ஏ பேராசையை, என்னுள் இருந்து கொண்டு என்னை இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க ஆட்டுவிக்கிறாய். தப்பு தப்பாக ஒவ்வொன்றையும் செய்ய வைக்கிறாய். இன்னுமா உனக்கு திருப்தி இல்லை?
आदित्यस्य गतागतैरहरहस्संक्षीयते जीवितं
व्यापारैर्बहुकार्यभारगुरुभि: कालोऽपि न ज्ञायते।
दृष्ट्वा जन्मजराविपत्तिमरणं त्रासश्च नोत्पद्यते
पीत्वा मोहमयीं प्रमादमदिरां उन्मत्तभूतं जगत् ॥
Aadityasya gataagatairaharahah samksheeyate jeevitam
Vyaapaarairbahukaaryabhaaragurubhih kaalo'pi na jnaayate
Drishtwaa janma jaraavipattimaranam traasashcha notpadyate
Peetwaa mohamayeem pramaadamadiraam unmattabhootam jagat [7]
ஒவ்வொருநாளும் அதிகாலை சூரியன் எழுகிறான், சாயந்திரம் மறைகிறான். அது மாதிரியே என் வாழ்விலும் எழுச்சி வீழ்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக நான் விடாமல் மரணத்தை நோக்கி செல்கிறேன். மக்கள் எல்லோருமே உலக வாழ்க்கையில்எதிலெல்லாமோ செயலில் ஈடுபட்டு, சுமையில் மூழ்கி, பொன்னான நேரம் பாழாவதை உணரவில்லையே. கண்ணுக்கு நேராக எத்தனை பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி, அத்தனையும் பார்த்தும் இன்னும் கொஞ்சம் கூட, ''ஐயோ இப்படி வாழ்க்கை நிலையாமை உணராமல் இருக்கிறோமே'' என்று பயப்படவே இல்லையே . இந்த மாதிரி அலட்சியம், உண்மையை உணராமை, ஏதோ குடிவெறியில் புத்தி இழந்து தடுமாறும் குடிகாரனாக அல்லவா நம்மை மாற்றிவிட்டது?.
हिंसाशून्यमयत्नलभ्यमशनं धात्रा मरुत्कल्पितं
व्यालानां पशवः तृणांकुरभुजः सृष्टा स्थलीशायिनः।
संसारार्णवलंघनक्षमधियां वृत्तिः कृता सा नृणाम्
यामन्वेषयतां प्रयान्ति सततं सर्वे समाप्तिं गुणाः॥
Himsaashoonyamayatnalabhyamashanam dhaatraa marutkalpitam
Vyaalaanaam pashavah trinaankurabhujah srishtaah sthaleeshaayinah
Samsaaraarnavalam ghanakshamadhiyaam vrittih kritaa saa nrinaam
Yaamanweshayataam prayaanti satatam sarve samaaptim gunaah [10]
ப்ரம்மா எவ்வளவு சிறந்த கருணை உள்ளம் கொண்டவன்! ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அல்லவா படைத்திருக்கிறான். பாம்புக்கு வெறும் காற்று போதும் அது தான் ஆகாரம். அதற்கு எந்த பிரயாசையும் படவேண்டாம். சுத்தமாக நிறைய தந்திருக்கிறான். எங்கு பார்த்தாலும் பச்சைப் புல், செடிகள். ஆடு மாடுகள் சுகமாக உண்டு ஜீவிக்க, அதன் மேல் படுக்கையாக உறங்குவதற்கு தந்தான். காசு கொடுக்கவேண்டாம். நமக்கு புத்தியை கொடுத்தான். சம்சார சாகரம் தாண்ட வழி எல்லாம் வைத்தான். அதற்கான குணமும் உள்ளே திணித்தான். யார் அதைப் பற்றி கவலைப்படுகிறோம்?
இதையே யார் படிக்கப்போகிறார்கள்???