339.இருந்த வீடுங்
339பொது
தீபம் ஜோதி நமஸ்துப்யம் தீபம் ஸர்வம் தமோபகம்
தீபேன சாத்யதி சர்வம் தீப ரூப ப்ரபோ நம
தனந்த தானந் தந்தன தனதன தனதான
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு முருகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையென மகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே
குரங்கு லாவுங் குன்றுரை குறமகள் மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே
சிவந்த காலுந் தண்டையு மழகிய பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

வீடு, குழந்தைகள், சுற்றம் , நாடு, மனைவி, இளமை முதலியவற்றை நிலை என்று நினைத்து மகிழாமல், விளக்கு ஏற்றி உன்னை வழிபட அருள்வாய். திருமாலின் மருகனே, மலையில் வாழும் குற மகள் வள்ளியின் மணவாளா, வேதங்களைத் தமிழில் யாவரும் தெரிந்து கொள்ளும்படி எழுதி ஞான சம்பந்தராக அவதரித்தவனே, உனது திருவடிகளை வழிபட அருள்வாயே.
விளக்கக் குறிப்புகள்
1 குருந்தில் ஏறும்...
கண்ணன் யமுனையில் நீராடும் மங்கையர்களின் துகிலை எடுத்துக் கொண்டு கரையில் உள்ள குருந்த மரத்தில் ஏறியதைக் குறிக்கும்.
கொல்லையஞ் சாரற் குருந் தொசித்த மாயவன் ---
சிலப்பதிகாரம்
கொங்க லர்ந்த மலர்க்கு ருந்த
மொசித்த கோவல னெம்பிரான்
சங்கு தங்கு தடங்க டல்துயில்
கொண்ட தாமரைக் கண்ணினன்...---
-திருமங்கை ஆழ்வார் ,பெரியதிருமொழி .
2.தமிழ் வேதம் ....
சம்பந்தர் தேவாரம் என்று கொள்ளலாம்-- ரிக் வேதம்
ருக்கு ஐயம் போக உரைத்தோன் --கந்தர் அந்தாதி
சுருதித் தமிழ்க் கவி-- திருப்புகழ், கவடுற்ற.
3. விளங்கு தீபங் கொண்டுனை வழிபட.....
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்
துளக்கு இல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்
அளப்பு இல் கதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே
- திருநாவுக்கரசர் தேவாரம்
குரங்குலாவு குன்று - வள்ளி மலை.