337.இரவொடும் பகலே
337பொது
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா தனதான
இரவொ டும்பக லேமா றாதே
அநுதி னந்துய ரோயா தேயே
யெரியு முந்தியி னாலே மாலே பெரிதாகி
இரைகொ ளும்படி யூடே பாடே
மிகுதி கொண்டொழி யாதே வாதே
யிடைக ளின்சில நாளே போயே வயதாகி
நரைக ளும்பெரி தாயே போயே
கிழவ னென்றொரு பேரே சார்வே
நடைக ளும்பல தாறே மாறே விழலாகி
நயன முந்தெரி யாதே போனால்
விடிவ தென்றடி யேனே தானே
நடன குஞ்சித விடே கூடா தழிவேனோ
திருந டம்புரி தாளி தூளி
மகர குண்டலி மாரீ சூரீ
திரிபு ரந்தழ லேவீ சார்வீ யபிராமி
சிவனி டந்தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி யாயீ மாயீ
சிவைபெ ணம்பிகை வாலா சீலா அருள்பாலா
அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபு ரந்தொளிர் நாதா பாதா
அழகி ளங்குற மானார் தேனார் மணவாளா
அரிய ரன்பிர மாவோ டேமூ
வகைய ரிந்திர கோமா னீள்வா
னமரர் கந்தரு வானோ ரேனோர் பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
337பொது
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா தனதான
இரவொ டும்பக லேமா றாதே
அநுதி னந்துய ரோயா தேயே
யெரியு முந்தியி னாலே மாலே பெரிதாகி
இரைகொ ளும்படி யூடே பாடே
மிகுதி கொண்டொழி யாதே வாதே
யிடைக ளின்சில நாளே போயே வயதாகி
நரைக ளும்பெரி தாயே போயே
கிழவ னென்றொரு பேரே சார்வே
நடைக ளும்பல தாறே மாறே விழலாகி
நயன முந்தெரி யாதே போனால்
விடிவ தென்றடி யேனே தானே
நடன குஞ்சித விடே கூடா தழிவேனோ
திருந டம்புரி தாளி தூளி
மகர குண்டலி மாரீ சூரீ
திரிபு ரந்தழ லேவீ சார்வீ யபிராமி
சிவனி டந்தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி யாயீ மாயீ
சிவைபெ ணம்பிகை வாலா சீலா அருள்பாலா
அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபு ரந்தொளிர் நாதா பாதா
அழகி ளங்குற மானார் தேனார் மணவாளா
அரிய ரன்பிர மாவோ டேமூ
வகைய ரிந்திர கோமா னீள்வா
னமரர் கந்தரு வானோ ரேனோர் பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
இடைவிடாமல் பசி என்ற நெருப்பால் பிடிபட்டு, ஆசைகள் பெரிதாகி, வாழ்க்கையில் வருத்தமே அதிகமாக அடைந்து, தருக்கம் பேசுவதிலேயே காலம் கழித்து, வயதாகி, நடை குன்றி, கோணி, குருடாகி எப்போது அடியேன் துன்பம் நீங்கி இன்பம் பெறுவது?
உன் திருவடிகளான வீட்டை அடையாது அழிந்து போவேனோ? சிவபெருமானுடைய இடது பாகத்தில் வாழும் பார்வதி அருளிய பாலனே, குறமான் வள்ளி நாயகியின் மணவாளா, திருமால், பிரமன், தேவர்கள் ஆகியோரின் பெருமாளே, திருவடியாகிய வீட்டை அடையாமல் நான் அழிவேனோ?
உன் திருவடிகளான வீட்டை அடையாது அழிந்து போவேனோ? சிவபெருமானுடைய இடது பாகத்தில் வாழும் பார்வதி அருளிய பாலனே, குறமான் வள்ளி நாயகியின் மணவாளா, திருமால், பிரமன், தேவர்கள் ஆகியோரின் பெருமாளே, திருவடியாகிய வீட்டை அடையாமல் நான் அழிவேனோ?
விளக்கக் குறிப்புகள்
1 திருநடம் புரிதாளி....
பரத்தினுச்சியி னடநவி லுமையரு ளிளையோனே...
---திருப்புகழ், தொடத்துளக்கி
பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
---திருப்புகழ், முகத்தைமினு
2. திரிபு ரந்தழ லேவீ சார்வீ யபிராமி...
அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி
-- திருப்புகழ்’ முகிலுமிரவி
பரத்தினுச்சியி னடநவி லுமையரு ளிளையோனே...
---திருப்புகழ், தொடத்துளக்கி
பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
---திருப்புகழ், முகத்தைமினு
2. திரிபு ரந்தழ லேவீ சார்வீ யபிராமி...
அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த அபிராமி
-- திருப்புகழ்’ முகிலுமிரவி