329. ஆசைக்கூர்
329பொது
மாத்ருகா புஷ்ப மாலை கோலம் ப்ரவாள பாதத்தில் அணிவேனோ?
தானனா தத்த தானனா தத்த
தானனா தத்த தனதான
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
மானபூ வைத்து நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ர
மாகவே கட்டி யொருஞான
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
மாசிலோர் புத்தி யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
வாளபா தத்தி லணிவேனோ
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
மூரல்வே டிச்சி தனபார
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
மூரிவே ழத்தின் மயில்வாழ்வே
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
வேகவே தித்து வருமாசூர்
வீழமோ திப்ப ராரைநா கத்து
வீரவேல் தொட்ட பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
ருப்புகழ் பாடல்கள் 1-300
திருப்புகழ் பாடல்கள் 1-300
ஆறுபடை ஸ்தலங்கள், இதர ஸ்தலங்கள்
இவைகளைப் பார்க்க .
http://thiruppugazhamirutham.blogspot.in/
பாடல்கள் எண் திருப்புகழ் அன்பர்கள் வெளியிட்டுள்ள திருப்புகழ் இசைவழிபாடு ( Edition VIII) புத்தகத்தில் கொடுத்துள்ளபடி
இந்த blog ல் பாட்ல்கள் 301 லிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டிக் இருக்கும் Dr Prof C.R Krishnamurthy அவர்கள் கொடுத்திருக்கும் பதவுரையை இங்கு சற்று மாறுதல்களுடன் கொடுக்கிகிறோம்

முருகா, உன் மீது ஆசை கொண்ட நான், ( பக்தி என்பது இங்கு ஆசையாக வெளிவருகிறது) என்னுடைய மனம் என்பதையே தாமரை மலராகக் கொண்டு, அதை அன்பு என்னும் நாரின் உதவியுடன், என்னுடைய நா என்ற இடத்தில் அழகாக வைத்து, அதற்கு ஞானம் என்ற நறுமணத்தை பூசி, நல்லறிவு என்னும் வண்டு அதை மொய்க்கும்படி வைத்து, மாத்ருகாமந்திர மாலையாக பூமாலைக் கட்டி, அதை உனது பவளம் போன்ற திருவடியில் சாத்தும் பாக்கியத்தைப் பெறுவேனோ.
வேடப்பெண்ணாகிய வள்ளியின் தன பாரத்தில் அழுந்திக் கிடக்கும் மார்பை உடையவனே. ஐராவத்தால் வளர்க்கப் பட்ட தெய்வ யானையின் கணவனே. கடல் வற்றும்படி மாமரமாக நின்ற சூரன் மீது வேலைச் செலுத்தி அவனை அழித்தவனே. உன் திருவடியில் ஞான மாலையை அணியும் பாக்கியத்தைப் பெறுவேனோ.
வேடப்பெண்ணாகிய வள்ளியின் தன பாரத்தில் அழுந்திக் கிடக்கும் மார்பை உடையவனே. ஐராவத்தால் வளர்க்கப் பட்ட தெய்வ யானையின் கணவனே. கடல் வற்றும்படி மாமரமாக நின்ற சூரன் மீது வேலைச் செலுத்தி அவனை அழித்தவனே. உன் திருவடியில் ஞான மாலையை அணியும் பாக்கியத்தைப் பெறுவேனோ.
விளக்கக் குறிப்புகள்
ருப்புகழ் பாடல்கள் 1-300
திருப்புகழ் பாடல்கள் 1-300
ஆறுபடை ஸ்தலங்கள், இதர ஸ்தலங்கள்
இவைகளைப் பார்க்க .
http://thiruppugazhamirutham.blogspot.in/
பாடல்கள் எண் திருப்புகழ் அன்பர்கள் வெளியிட்டுள்ள திருப்புகழ் இசைவழிபாடு ( Edition VIII) புத்தகத்தில் கொடுத்துள்ளபடி
இந்த blog ல் பாட்ல்கள் 301 லிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டிக் இருக்கும் Dr Prof C.R Krishnamurthy அவர்கள் கொடுத்திருக்கும் பதவுரையை இங்கு சற்று மாறுதல்களுடன் கொடுக்கிகிறோம்
Last edited by soundararajan50; 16-08-18, 11:05.