328.ஆசார ஈனன்
328பொது
தானான தான தனதன தானான தான தனதன
தானான தான தனதன தனதான
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
னாகாத நிச னநுசிதன் விபரீதன்
ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவச
னாகாச நிர்ம ணனல்வளி யுருமாறி
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
வாயாத பாவி யிவனென நினையாமல்
மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
மாஞான போத மருள்செய நினைவாயே
வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
வேதாள ராசி பசிகெட அறைகூறி
மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர
மீதேற வேல்கொ டமர்செயு மிளையோனே
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
கூறாம னீய அவனுகர் தருசேடங்
கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
கோலாக நாத குறமகள் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

ஒழுக்கம் குறைந்தவன், பெருங் கோபத்தால் பல குற்றம் செய்பவன், இழி குணத்தன், அசுத்தன், மூவாசைகளால் பீடிக்கப்பட்டவன், காம நூல்களைக் கற்றுத் தன் வசம் இழந்தவன், ஐந்து பூதங்களால் ஆன முப்பத்திரண்டு குணங்களைக் கொண்ட உடலோடு ஞானம் இல்லாத பாவி என்று நினைத்து என்னை ஒதுக்கி விடாமல், என்னை உன் குழந்தையாகப் பாவித்து, இனி மேலாவது எனக்கு ஞான உபதேசத்தை அருள உன் திருவுள்ளத்தில் நினைந்தருள வேண்டும்.
கடல் வற்றும்படியும், வேத கணங்களுக்குப் பசி தணியவும் அறை கூறிச் சூரனைப் போருக்கு அழைத்து அசுரர்களை அழித்தவனே. கண்ணப்பனாகிய வேடன் உமிழ் நீரால் எச்சில் படுத்திக் கொடுத்த மாமிசத்தைத் தகாது என்று ஒதுக்கி விடாமல் அதை உண்ட வேத முதல்வனான சிவபெருமான் பெற்ற குமரனே. உலக நாயகனே.வள்ளியின் கணவனே. எனக்கு ஞான உபதேசம் அருளுக.

1மாசான நாலெண் வகைதனை ......
உயிர்ப் பொருள்களின் குணங்கள் 32 . (குணப் பண்பு 27, தொழில்பண்பு 5).
குணப்பண்பு (27) - அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, உவப்பு, இரக்கம், நாண், வெகுளி, துணிவு, அழுக்காறு, அன்பு,எளிமை, வய்த்தல், துன்பம், இன்பம், இளமை, மூப்பு இகல், வென்றி, பொச்சாப்பு, ஊக்கம், மறம், மதம், மறவி. தொழில் பண்பு (5) - துய்த்தல், துஞ்சல், தொழுதல், அணிதல், உய்த்தல்.
2கூசாது வேடன் உமிழ்தரு நீராடி....
இது கண்ணப்பர் வரலாற்றைக் குறிகும். இதன் விளக்கம்
திண்ணனார் என்னும் வேடன் வேட்டை ஆடக் காளத்தி மலைக்குச் சென்ற போது, அம்மலையில் சிவபிரானது திருவுருவச் சிலையைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்.
தம்முடன் வந்த நாணன் என்பவரைப் பச்சிலையையும், பூவையும் அச்சிலைக்கு இட்டது யார் என்று வினவினார். ஒரு அந்தணர் இங்ஙனம் பூசை செய்வதாக அறிந்து, அது முதல் தாமும் அங்ஙனமே தினமும் பூசை செய்யத் தொடங்கினார். இதை அறிந்த சிவகோசரியார் ஆகிய அந்தணர் சீற்றம் கொண்டு, இறைவனை அபசாரம் செய்தவனைத் தண்டிக்க வேண்டினார். இறைவன் மறு நாள் மறைந்திருந்து திண்ணப்பரின் அன்பைக் காணுமாறு பணித்தார். திண்ணப்பர் மறு நாள் வந்ததும் இறைவன் கண்ணிலிருந்து இரத்தம் வடிவதைக் கண்டு பதை பதைத்தார். பச்சிலையில் உதிரம் நிற்காமல் போகவே, தன் ஒரு கண்ணைக் எடுத்து இறைவன் கண்ணில் வைத்தார். இரத்தம் நின்றது. ஆனால் இரத்தம் மற்ற கண்ணிலிருந்து வடிய ஆரம்பித்தது. கண்ணப்பராகிய திண்ணனார் தமது அடுத்த கண்ணையும் பறிக்க முயன்ற போது, இறைவன் நில்லு கண்ணப்ப என்று அவரைத் தடுத்து ஆட்கொண்டார்.
--------------------------புன வேடன்
பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு
பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே.......... திருப்புகழ், மச்ச மெச்சு
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
கூறாம னீய அவனுகர் தரு சேடங்.....................திருப்புகழ்ம், ஆசாரவீன.
இதவிய காணிவை ததை என வேடுவன்....திருப்புகழ், அதலசேதடனாராட
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்துகோத்து அங்கு
அழல்உறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பாத்த்துப் படைத்த இவ் இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்தருளும் என்றார்---
பெரிய புராணம் - கண்ணப்ப நாயனார்
3. யாது தானர் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள் தானவருமாகிய அரக்கர்கள். இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர்.