Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    327. அமலவாயு
    327பொது
    கருணை மேகமே தூய கருணைவாரியே யீறில்
    கருணைமேருவே தேவர் பெருமாளே
    எனது யான் என்பவைகளை நீக்கி எல்லாரும் எல்லாமும் யானாகும் பெருநிலையை அருள்வாயே எனது பிரார்த்தனை
    தனன தான தானான தனன தான தானான
    தனன தான தானான தனதான
    அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
    அமுத பான மேமூல அனல்மூள
    அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
    அரிச தான சோபான மதனாலே
    எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
    மௌiது சால மேலாக வுரையாடும்
    எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
    இதய பாவ னாதீத மருள்வாயே
    விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
    விபுத மேக மேபோல வுலகேழும்
    விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
    வெகுதி தாமு காகாய பதமோடிக்
    கமல யோகி வீடான ககன கோள மீதோடு
    கலப நீல மாயூர இளையோனே
    கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்
    கருணை மேரு வேதேவர் பெருமாளே.





    பதம் பிரித்து உரை



    அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல
    அமுத பானமே மூல அனல் மூள


    அமல வாயு - பிராண வாயு ( அமலம் – மாசு அற்றது- தூய்மையான) ஓடாத - மேற் கொண்டு செல்லாதபடி கமல நாபி மேல் - மூலாதார கமலத்தின் மீது மூல(ம்) - அங்ஙனம் செய்ததின் மூலம் அமுத பானமே - அமுத பானம் பருகும்படி மூல அனல் மூள - மூலாக்கினி சுடர் விட்டு எழ.


    அசை உறாது பேராத விதம் மேவி ஓவாது
    அரி சதான சோபானம் அதனாலே


    அசை உறாது பேராத விதமும் மேவி - மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் சலனமில்லாமல் நெகிழாதபடி ஒரு நிலையில் இருந்து ஓவாது - அந்த நிலையில் இருந்து மாறாமல் அரிச(ம்) அதான - மகிழ்ச்சி தருவதான சோபானம் அதனாலே - படிப்படியாக மேலேறும் யோக முறையாலே.


    எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம்
    எளிது சால மேலாக உரையாடும்


    எமனை மோதி - நமனையும் தாக்குவது போல் ஆகாச ககனமாம் - ஆகாயம் வரை பறந்து போகும் மனோபாவம் - மனத்தின் தன்மை எளிது சால - மிகவும் எளிதான வகையில். மேலாக உரையாடும் - மேலெழுந்து அகங்காரத்துடன் பேசுகின்ற.


    எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும்
    இதய பாவனா தீதம் அருள்வாயே


    எனது - எனது என்ற மமகாரமும். யானும் - நான் என்ற அகங்காரமும். வேறு ஆகி - நீங்கி எவரும் - பிறர் யாவரும் யாதும் - பிற பொருள்கள் யாவும் யான் ஆகும் - நானே என்றும் இதய பாவனா தீதம் - மனோ பாவத்திற்கு எட்டாத பெரு நிலையை. அருள்வாயே - தந்து அருள்வாயாக.


    விமலை தோடி மீதொடு யமுனை போல ஓர் ஏழு
    விபுத மேகமே போல உலகு ஏழும்




    விமலை - பரிசுத்தமான தேவியின் தோடி மீதோடு - தொடி என்னும் கை வளையினின்றும். யமுனை போல - (மேலெழுந்து வந்த) யமுனை நதி போலவும். ஓர் - ஒப்பற்ற. ஏழு விபுத - எங்கும் வியாபித்திருக்கும் தன்மை வாய்ந்த (விபு – வியாபகம்) மேகமே போல - மேகங்களைப் போலவும் உலகு ஏழின் - ஏழு உலகங்களின்


    தொடி (வளையல்) சந்ததிற்காக தோடி என்று விரிந்தது


    விரிவு காணும் மாமாயன் முடிய நீளு மாறு போல
    வெகு வித முக ஆகாய பதம் ஓடி


    விரிவு காணும் மாமாயன் – விருந்திருக்கும் பரப்பை காணவல்ல பெரிய மாயனாகிய திருமால் முடிய நீளும் மா போல - (அண்டங்களின்) முழுமையும் எட்டும்படி பல்வேறு திசையிலும் பரந்து விசுவ ரூபம் எடுத்தது போலவும் (திருவிக்ரம அவதாரம் போல) வெகு வித முக ஆகாய பதம் ஓடி - பல திசைகளின் அளவுக்கும், ஆகாய அளவுக்கும் ஓடிச் சென்று.


    கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி
    கலப நீல மாயூர இளையோனே


    கமல யோனி - (திருமாலின் உந்தித்) தாமரையில் உதித்த பிரமனின் வீடான - இருப்பிடமான ககன கோளம் மீது ஓடு - விண்ணில் உள்ள மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற
    கலப நீல மாயூர - நீல தோகை விளங்கும் மயில் வாகனனே இளையோனே - என்றும் இளையவனே.
    மயில், பிரமனுடைய வீடான அண்ட கோளத்துக்கு மேலே எழுந்து பறப்பதாக சொல்லப்படுகிறது.


    கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல்
    கருணை மேருவே தேவர் பெருமாளே.


    கருணை மேகமே - கருணை மேகமே. தூய கருணை வாரியே - பரிசுத்தமான கருணைக் கடலே. ஈறு இல் - முடிவில்லாத கருணை மேருவே - கருணைப் பெரு மலையே. தேவர் பெருமாளே - தேவர்கள் போற்றும் பெருமாளே.



    சுருக்க உரை





    விளக்கக் குறிப்புகள்


    1 எமனை மோதி ஆகாச கமன மா.......
    எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
    யென துபடை தீர நீயும் அருள்வாயே
    --- திருப்புகழ்: ஒருவழியடாது
    2 எனதி யானும் வேறாகி....
    எனது – புறப்பற்று: யான்- அகப்பற்று


    யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்
    குயர்ந்த உலகம் புகும் --- திருக்குறள்


    3 யமுனை போல ஓர்..
    சிவபெருமான் ஒருமுறை உமையம்மையின் திருக் கரங்களிலே தன் முகத்தைப் பதிக்க, தேவியின் பத்து விரல்களிலும் வியர்வை பெருக்கெடுத்து, அதுவே கங்கை, யமுனை முதலிய நதிகளாயின என்பது புராண வரலாறு. இந்தப் புராணச் செய்தி குறிப்பிடப்படுகிறது.


    வள்ளிமலை ஸ்வாமிகளுக்கும் இந்த பாடலுக்கும் உள்ள தொடர்பு

    https://groups.google.com/forum/#!to...al/g0JzOKpxVoc
Working...
X