326.அப்படியேழு மேழும்
326பொது
பிறவி அற இந்த பாடலை பாடலாம் எனபர் பெரியவர்கள்
தத்தன தான தானன தத்தன தான தானன
தத்தன தான தானன தனதான
அப்படி யேழு மேழும்வ குத்தவ ழாது போதினி
னக்ரம்வி யோம கோளகை மிசைவாழும்
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
னைத்துரு வாய காயம தடைவேகொண்
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
கிற்றடு மாறி யேதிரி தருகாலம்
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
னிப்பிற வாது நீயருள் புரிவாயே
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
கற்புடை மாது தோய்தரு மபிராம
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
கற்பக லோக தாரண கிரிசால
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
வெட்சியு நீப மாலையு மணிவோனே
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
விக்ரம வேலை யேவிய பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை .
விளக்கக் குறிப்புகள்

பதினான்கு உலகங்களையும் தவறுதல் இல்லாத வகையில் வகுத்து
அண்ட கோளத்திலும் வாழ்பவனும், சரஸ்வதிக்குத் தலைவனுமாகிய
பிரமனின் விதிப்படி, மாறி மாறி பல உடல் உருவங்களை எடுத்துப் பிறந்து, இறந்து, தடுமாறும் நான் இனி பிறவா வண்ணம் அருள்புரிவாயாக
பசிய தினைப் புனத்தில் வீற்றிருந்த கற்பு நிறைந்த வள்ளி அணைதரும்
அழகனே, வாசனைப் பொருள்கள் அணிந்தவனே, மல் யுத்தம் புரிவதற்கு ஏற்ற புயங்களை உடையவனே, இந்திரனின் பொன்னுலகை நிலைக்கச் செய்தவனே, மலைகளில் வாழ்பவனே, அந்தணர்கள் கூட்டத்தில் இருப்பவனே, வேதத்தில் உள்ளவனே, பூமியின் காவலனே, வெட்சியும், கடப்பமும் அணிபவனே, கடல் சேறு படவும், எழு கிரிகளும் சூரனும் அழிபட வேலை எய்தியவனே, நான் இனிப் பிறவாது அருள் புரிவாயாக.

கோவின் விதிப்படி மாறி மாறி---
ஏட்டின் விதிப்டி யேகொடு மாபுர
வீட்டி லடைத்திசை வேகசை மூணதி
லேற்றி யடித்திட வேகட லோடம தெனவேகி திருப்புகழ்: ஏட்டின்விதி
பதினான்கு உலகங்கள்
மேலுலகம் 7. பூலோகம், புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்
கீழுலகம் 7. அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இராசதலம், பாதாளம்
அக்ரம் - நுணி