325. அதல சேட னாராட
325பொது
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான தனதான
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடுதி அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

ஆதிசேடன், மேரு மலை, காளி, சிவபெருமான், அவர் அருகில் உள்ள பூத வேதாளங்கள், சரஸ்வதி, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன், விண்ணோர், மதி, இலக்குமி, திருமால் இவர்கள் அனைவரும் ஆடி வர, நீயும் உன் மயில் மீது ஏறி நடமாடி வந்து என் முன்னே வரவேணும்.
கதாயுதத்தை ஒரு போதும் விடாத வீமசேனனை எதிர்த்த பெருஞ் சேனைகள் பொடிபட உதவியவரும், பசுக் கூட்டங்களைக் குழல் ஊதி மீட்டவரும், அருச்சுனனுக்குத் தேர்ப்பாகனாக இருந்தவரும், கடலில் பள்ளி கொள்பவரும், உலகத்தை அளந்தவருமாகிய திருமாலுக்கு மருகனே, பிரபுட தேவ மகாராஜனுடைய உள்ளத்தில் வாழ்பவனே.
தேவர்கள் பெருமாளே. மயில் மீது ஏறி ஆடி என் முன்னே வரவேணும்.

1. சம்பந்தாண்டான் என்பவரோடு அருணகிரியார் வாது செய்த போது முருக வேளைப் பிரபுட தேவராஜனுடைய சபையில் வரவழைக்கப் பாடிய பாடல் இது.
சயிலமெ றிந்தகை வேற்கொடு
மயிலினில் வந்தெனை யாட்கொளல்
சகமறி யும்படி காட்டிய குருநாதா --- திருப்புகழ், அரிவையர்நெஞ்சு
முருக பெருமான் கம்பத்திலிருந்து வெளிப்பட்டுப் பிரபுடதேவராஜன் முதலிய அனைவரும் கண்டு களிக்கக் காட்சியளித்த திருவருட் செயல் உலகமறிய நிகழ்ந்தது என சொல்கிறார்
2. அதிர வீசி வாதாடும்....
முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ. நீ முழங்கு அழல்
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ.. ` .----சம்பந்தர் தேவாரம்
3. அருக பூதவேதாளம் அவையாட....
ஊன் அடைந்த வெண்தலையினோடு பலி திரிந்து
கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே..
-- சம்பந்தர் தேவாரம்

Last edited by soundararajan50; 11-08-18, 10:20.