324. அடியார் மனஞ்சலிக்க
324பொது
களிகூர என் தனக்கு மயில் ஏறி வந்து முத்தி
கதி ஏற அன்பு வைத்து உன் அருள் தாராய்
தனதான தந்த னத்த தனதான தந்த னத்த
தனதான தந்த னத்த தனதான
அடியார்ம னஞ்ச லிக்க எவராகி லும்ப ழிக்க
அபராதம் வந்து கெட்ட பிணிமூடி
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
அனலோட ழன்று செத்து விடுமாபோற்
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
கலியோடி றந்து சுத்த வெளியாகிக்
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்து னருள்தாராய்
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
தழல்மேனி யன்சி ரித்தொர் புரமூணும்
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
தழல்பார்வை யன்ற ளித்த குருநாதா
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்த மருள்வோனே
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்குறத்தி
மிகுமாலொ டன்பு வைத்த பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

அடியார்களுடைய மனம் சலிக்கும்படி யாராவது பழித்தால் அதனால் பிழைஏற்பட்டு, பிணி உற்று நெருப்பில் வெந்து இறந்து விடுவது போல், மிக இழிந்தவனாகிய என்னுடைய மும்மலங்களும், இரு வினைகளும், சுத்தமான ஞான பர வெளி புலப்பட்டு, என்னைப் பிடித்துள்ள தரித்திரமும் அழிபட, மயில் மீது ஏறி வந்து, உன் திருவடியைத் தந்தருளுக.
சடையில் கங்கையைச் சூடியுள்ள இடப வாகனனாகிய சிவ
பெருமானுடைய நெற்றிக் கண்களிலிருந்து அன்று மன்மத னுடைய உடல் எரிந்து அழிய நெருப்பு வெளிப்பட்ட சிவனுக்குக் குருநாதரே, தேவர்கள் துயரம் நீங்க வஞ்சகர் களாகிய அசுரர்களை ஒழித்து நடனம் புரிந்தவனே, மின்னல் போன்ற நுண்ணிய இடையை உடைய வள்ளி நாயகி மீது ஆசை மீது அன்பு வைத்த பெருமாளே, நான் கதி ஏற அருள் தாராய்.