323. அகர முதல் என
323பொது
சாதகர்கள் நிஷ்டையில் இருக்கும்பொழுது பல செய்திகள் அவர்கள் காதில் ஒலிக்கின்றன. உலக நன்மையின் பொருட்டு அவர்கள் அவற்றை மந்திரங்களாக எடுத்து உரைக்கின்றனர் இதுவே வேதம். முதல் முதலில் காதின் வழியாக கேட்கப்பட்டு இது வந்ததால் சுருதி என்று பெயர். இவை பல கைப்பட்டாலும் கடைசியில் ஒரே பரம் பொருளைத்தான் உணர்த்துகிறது. இந்த தனிப் பொருளை உணர்த்தி அருள்வாயே. அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை எப்பொருளும் ஆய விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே
– குகஸ்ரீ ரசபதி விளக்கம்
தனனதன தனனதன தந்தந்த தத்ததன
தனனதன தனனதன தந்தந்த தத்ததன
தனனதன தனனதன தந்தந்த தத்ததன தத்ததனதான
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளுமாய
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
முடிவையடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்தரயமெ ரித்தபெருமானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியுமவுன மந்த்ரந்த னைப்பழைய
நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள்வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகுதீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமியாவும்
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொருகோடி
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்தபெருமாளே.
பதம் பரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

அகரம் முதலான எழுத்துக்களையும், எல்லா கலைகளையும், மறைகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற மெய்ப்பொருளை, ஞான நிலையில் மட்டும் அறியக் கூடும் இன்பப் பொருளை, யோகியர் தன் மயமாக நிற்கும் உயர் நிலையில் மட்டும் விளங்கும் பொருளை, முதல் நடு, முடிவு இல்லாத உயர் பொருளை, மும்மலங்களும், முக்கரணங்களும் கடந்து விளங்கும் முடிவுப் பொருளை, முப்புரம் எரித்த சிவ பெருமான் போற்றிய போது நீ உபதேசித்து அருளியப் பொருளை, வழி அடிமையாகிய எனக்கும் உபதேசம் செய்க.
பல வாத்தியங்கள் பேரொலி செய்யவும், கழுகுகளும், காகங்களும், பேய்களும் பிணங்களைத் தின்று நடனம் செய்யவும், போர்க்களத்தில் அசுரர்களை அழித்து இந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியைத் தந்தருளிய பெருமாளே, மவுன மந்திரத்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்ததைப் போல் எனக்கும் உணர்த்தி
அருள்வாயே.

அகரமுத லெனவுரை செய் ஐம்பந்தொ ரக்ஷரமும்....
மூலாதாரம் – 4, சுவாதிஷ்டானம் – 6, மணி பூரகம் – 10, அனாகதம்
-12, விசுத்தி – 16. ஆஞ்ஞை - 3. மொத்தம் - 51.
ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்ப தெழுத்தே அஞ்செழுத் தாமே --- திரு மந்திரம்.
அகர மாதி யாமக்ஷ ரங்க
அவணி கால்வி ணாரப் பொடங்கி
அடைய வேக ரூபத்தி லொன்றி முதலாகி
---திருப்புகழ், முகமெலாநெய்
அகர முதலுருகொ ளைம்பபந் தொரக்ஷரமொ
டகில புவனநதி யண்டங் களுக்குமுத
இருண கிரணவொளி யெங்கெங் குமுற்றுமுதல் நடுவான
- திருப்புகழ், அமலகமல
விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருளாயோ...
அருணகிரி நாதர் சிவனுக்கு உபதேசித்த இரகிசியத்தைத் தமக்கும் உபதேசிக்குமாறு பல உத்திகளைக் கையாண்டு உள்ளார்.
நயமாகக் கேட்டது -
நாதா குமரா நமஎன் றரனார்
ஓதாய்என ஓதிய தெப்பொருள்தான் --- கந்தர் அனுபூதி
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவ
- திருப்புகழ் 323 (இப்பாடல்)
ஏமாற்றும் வகையில் கேட்டது -
வேண்டாமை யொன்றைய டைந்துள
மீண்டாறி நின்சர ணங்களில்
வீழ்ந்தாவல் கொண்டுரு கன்பினை யுடையோனாய்
--திருப்புகழ் 412 ,மாண்டாரெலும்
ஏசும் வகையில் கேட்டது -
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த வுபதேசம்
சிறியேன்த னக்கு முரைசெயிற்சற் றுங்கு ருத்து வங்கு
றையுமோதான் - திருப்புகழ் 293, சயிலாங்கனை.
விசும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்.....
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்... – திருப்புகழ், குருவியென