322.கும்பகோணமோடு
322க்ஷேத்திரக் கோவை
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன தனதான
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு சிவகாசி
கொந்து லாவிய ராமேசு ரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர்வி ரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர வயலூரா
கந்த மேவிய போரூர்ந டம்புரி
தென்சி வாயமு மேயாய கம்படு
ண்டி யூர்வரு சாமீக டம்பணி மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
322க்ஷேத்திரக் கோவை
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன தனதான
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு சிவகாசி
கொந்து லாவிய ராமேசு ரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர்வி ரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர வயலூரா
கந்த மேவிய போரூர்ந டம்புரி
தென்சி வாயமு மேயாய கம்படு
ண்டி யூர்வரு சாமீக டம்பணி மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம், தேவர்கள் வாழும் சீகாழி, திருப்பரங்குன்றம் முதலிய ஸ்தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே, சோழ நாட்டில் சிறந்த தலைநகரமான கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே, கம்பா நதி விளங்கும் காஞ்சியில் மாமரத்தின் அடியில் பொருந்தி விளங்கும் அழகனே, சங்குகள் உலவும் காவேரி கடலுடன் சங்கமம் ஆகும் முகத்துவாரத்தில் உள்ள காவிரிப் பூம்பட்டினத்திலும், திரிசிராப்பள்ளியிலும் வாழ்கின்ற தேவனே, பூத சேனைகளை உடையவனே வயலூர் பெருமானே
இந்திராணி பெற்ற தேவசேனையுடன், குற மங்கையாகி வள்ளியையும் திருமணம் செய்து கொண்டு, உலகில் எங்குமுள்ள ஸ்தலங்களில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்கு அருள் புரிவாயாக
இந்திராணி பெற்ற தேவசேனையுடன், குற மங்கையாகி வள்ளியையும் திருமணம் செய்து கொண்டு, உலகில் எங்குமுள்ள ஸ்தலங்களில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்கு அருள் புரிவாயாக
விளக்கக் குறிப்புகள்