320.மாலி னாலெடுத்த
320வைத்தீசுரன் கோயில்
தான தான தத்த தந்த தான தத்த தந்த
தான தான தத்த தந்த தனதான
மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்ந்த பொந்தி
மாறி யாடெ டுத்த சிந்தை யநியாய
மாயை யாலெ டுத்து மங்கி நேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி நிப்பி றந்து இறவாமல்
வேலி நால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர் கணமூடே
மேவு யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து அருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை முருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா
சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து
சூரை யோது பத்த ரன்பி லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
சேவல் கேது சுற்று கந்த பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

ஆசையே உருவாகி அமைந்த கந்தையும், சோறு கொண்டு வளர்க்கப்படும் உடல், பல எண்ணங்களைக் கொண்ட உள்ளம் இவைகளை எடுத்தாவனாகி, ஐயனே, வாட்டம் உறுகின்றேன் இனி எனக்குப் பிறப்பும், இறப்பும் இல்லாமல் இருக்கவும், உன் கையில் ஏந்திய வேலால் என் வினைகள் நீங்கித் தூளாகும்படி மோட்ச வீட்டைத் தந்து அருளுக
உனதடியார் கூட்டத்தில் நானும் கலந்து, பரிசுத்தமான உள்ளம் பெற, கந்த வேளே உற்ற துணையாகும் என்று நான் சிவலோக நிலையை அடைய அன்பு கூர்ந்து அருள் புரிவாயாக மன்மதனுடைய பாணத்தால் பல கோடி மாதர்களைப் புணர்ந்த காளையாகிய திருமாலாகிய விடையின் மேல் ஏறிய சிவபெருமான் அருளிய குழந்தையே சேல் மீன் போன்ற கண்களை உடைய வள்ளியின் தோள்கள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே தேவர்களும் சித்தர்களும் வணங்கும் புள்ளிருக்கும் வேளூரில் உகந்த பெருமாளே சேவல் கொடி சுற்றியிருக்க மகிழும் பெருமாளே என்னைப் பரிந்து அருள் புரிவாயாக

சோறினால் வளர்ந்த பொந்தி
சோற்றைத் துருத்திச் சுமைசுமப்பக் கண் பிதுங்கக்
காற்றைப் பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே
தாயுமானவர், பராபரக் கண்ணி
வாரையா வாரும் ஐயா என்பதின் மரூஉ
வேலினால் வினைக் கணங்கள் தூளதா
வினையோட் விடும் கதிர் வேல மறவேன் -கந்தர் அனுபூதி
வினை எறியும் வேற் கரமும் -திருப்புகழ், விரைசொரியு
காளை ஏறு கர்த்தன் எந்தை
திரிபுரங்களை எரிக்கச் சிவபெருமான் எழுந்தருளிய போது, இறைவன் வெற்றி அடையப் போவது நம்மால் என்று தேவர்கள் நினைத்தனர் இதை உணர்ந்த சிவன் தேரைச் சற்று அழுத்த தெர் ஒடிந்து யாவரும் நிலை கலங்கினர் அப்போது திருமால் காளையாகி இறைவனைத் தாங்கினார்
தடமதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபம் அது ஆய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ
திருவாசகம் திருச்சாழல்
அநந்த கோடி மாதரைப் புணர்ந்த
நரகாசுர வதம் செய்து அவனால் கொண்டு போகப்பட்ட மந்தர மலையின் சிகரமான ரத்ன கிரியில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ கன்னிகைகள் பதியாறாயிரம் பேரையும் கண்ணன் மணந்து கொண்டார்
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு
பெளவ மெறிதுவரை
எல்லரும் சூழச்சிங் காசனத்தே
இருந்தானைக் கண்டாருளர் பெரியாழ்வார் திருமொழி