Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    316. சூழும்வினை
    316வேதாரணியம்
    தானன தத்தத் தந்தன தந்தன தனதானா
    சூழுங்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ்
    சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு துணையாதே
    ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ
    ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே
    ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை யெழுநாளே
    ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் மருகோனே
    வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு முருகோனே
    வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே



    பதம் பிரித்தல்

    சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம்
    சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே


    சுழும் வினைக் கண் -(என்னைச்) சூழ்ந்துள்ள வினையின் காரணமாக வருகின்ற துன்பம் - துன்பம் நெடும் பிணி - நீண்ட நோய் கழி - மிகுந்த காமம் - ஆசை சோரம் - களவு, வஞ்சனை இதற்கு - இவைகளை சிந்தை நினைந்து - மனத்தில் நினைவு கொண்டிருந்தால் உறு துணை யாதே - எனக்கு உற்ற துணை ஏது உள்ளது?


    ஏழை என் இத் துக்கங்களுடன் தினம் உழல்வேனோ
    ஏதம் அகற்றி செம் பத சிந்தனை தருவாயே


    ஏழை என் - ஏழையாகிய நான் இத் துக்கங்களுடன் - இத்தகைய துக்கங்களுடன் தினம் உழல்வேனோ - நாள் தோறும் அலைச்சல் உறுவேனோ? ஏதம் - (எனது) குற்றங்களை அகற்றி - நீக்க செம் பத சிந்தனை தருவாயே - செம்மையான திருவடியைச் சிந்திக்கும் எண்ணத்தைத் தந்து அருள்வாய்




    ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே
    ஆண்மை செலுத்தி கொண்ட கரும் புயல் மருகோனே
    ஆழி அடைத்து - கடலை அணையால் அடைத்து தம் கை - தமது கையில் இலங்கையை எழு நாளே - ஏழே நாட்களில் இலங்கையை ஆண்மை செலுத்திக் கொண்ட - வீரத்தால் கைக் கொண்ட கரும் புயல் மருகோனே - கரிய நிறத்துத் திருமாலின் மருகனே




    வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே
    வேத வனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே


    வேழ முகற்குத் தம்பியே - யானை முகமுடைய விநாயகருக்குத் தம்பியே திரு முருகோனே - சொல்லப்படும் அழகிய முருகனே வேத வனத்தில் - வேதாரணியத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே - சிவபெருமான் தந்து அருளிய பெருமாளே



    சுருக்க உரை



    விளக்கக் குறிப்புகள்
    தங்கையி லங்கையை யெழுநாளே ஆண்மை செலுத்தி
    எழு நாளே ஆண்மை செலுத்தி இலங்கையைத் தம் கைக் கொண்ட கரும் புயல் என்று பிரிக்கவேண்டும்
Working...
X