314.சிகரிக ளிடிய
314வெள்ளிகரம்
( ராஜதகிரி )
தனதன தனன தனதன தனன
தய்யன தத்த தந்த தனதான
சிகரிக ளிடிய நடநவில் கலவி
செவ்விம லர்க்க டம்பு சிறுவாள்வேல்
திருமுக சமுக சததள முளரி
திவ்யக ரத்தி ணங்கு பொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி
ஐவன வெற்பில் வஞ்சி கணவாஎன
றகிலமு முணர மொழிதரு மொழியி
னல்லது பொற்ப தங்கள் பெறலாமோ
நிகரிட அரிய சிவசுத பரம
நிர்வச னப்ர சங்க குருநாதா
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
நெல்லிம ரத்த மர்ந்த அபிராம
வெகுமுக ககன நதிமதி யிதழி
வில்வமு டித்த நம்பர் பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமல
வெள்ளிக ரத்த மர்ந்த பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
வெகுமுக ககன நதி
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு பரமேசர்
- திருப்புகழ், ‘அழகுதவிழ்’
இதழி வெகு முக கண – சீர்பாத வகுப்பு
314வெள்ளிகரம்
( ராஜதகிரி )
தனதன தனன தனதன தனன
தய்யன தத்த தந்த தனதான
சிகரிக ளிடிய நடநவில் கலவி
செவ்விம லர்க்க டம்பு சிறுவாள்வேல்
திருமுக சமுக சததள முளரி
திவ்யக ரத்தி ணங்கு பொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி
ஐவன வெற்பில் வஞ்சி கணவாஎன
றகிலமு முணர மொழிதரு மொழியி
னல்லது பொற்ப தங்கள் பெறலாமோ
நிகரிட அரிய சிவசுத பரம
நிர்வச னப்ர சங்க குருநாதா
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
நெல்லிம ரத்த மர்ந்த அபிராம
வெகுமுக ககன நதிமதி யிதழி
வில்வமு டித்த நம்பர் பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமல
வெள்ளிக ரத்த மர்ந்த பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
மலைகள் நடுங்கும்படி நடனம் செய்கின்ற மயில், அன்றலர்ந்த கடப்ப மலர், சிறு வாள், வேல், தாமரை போன்ற ஆறு திருமுகங்கள், போர் செய்ய வல்ல கோழி இவைகளை எல்லாம் பொருந்தியவரே வள்ளியின் கணவனே, என்று உலகெல்லாம் உணரும்படி, சொற்களால் சொன்னாலன்றி, உனது அழகிய திருவடியைப் பெற முடியுமா?
ஒப்பற்ற சிவபெருமானின் சேயே, பரமனே, வாக்குக்கு எட்டாதவனே, கங்கை, நிலவு, கொன்றை, வில்வம் ஆகிவற்றைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு மௌன உபதேசம் செய்த குரு நாதனே, தாமரை போன்ற திருவடியை உடையவரே, வெள்ளிகரத்தில் உறையும் பெருமாளே உன் பொற் பாதங்களைப் பெற முடியுமோ?
ஒப்பற்ற சிவபெருமானின் சேயே, பரமனே, வாக்குக்கு எட்டாதவனே, கங்கை, நிலவு, கொன்றை, வில்வம் ஆகிவற்றைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு மௌன உபதேசம் செய்த குரு நாதனே, தாமரை போன்ற திருவடியை உடையவரே, வெள்ளிகரத்தில் உறையும் பெருமாளே உன் பொற் பாதங்களைப் பெற முடியுமோ?
விளக்கக் குறிப்புகள்
வெகுமுக ககன நதி
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு பரமேசர்
- திருப்புகழ், ‘அழகுதவிழ்’
இதழி வெகு முக கண – சீர்பாத வகுப்பு