311.பசையற்ற
311விருத்தாசலம்
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
தனதத்த தனதத்த தனதான
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல் வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப தொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று முளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி யுடையோனே
வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன் மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர்விர்த்த கிரியுற்ற பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

ஈரமில்லாத உடல் வற்றிப் போய், நடை தளர்ந்து, தடி ஊன்றி, பற்கள் விழுந்து, குருடாகி, உடல் நெகிழ்ந்து பழம் போலாகி, துன்fபம் நிறைந்த இந்த பிறப்பிலிருந்து என்னை விடுவித்து, உன் திருவருளைத் தருவதும் ஒரு நாள் கிட்டுமோ?
கலக்கம் உற்ற அசுரர்கள் மடிந்து ஒழிய, தேவர்கள் பூமியே மறையும்படி பூக்களைப் பொழியச் செய்த நிகரில்லாதவனே, வெற்றியை உடையவனே, பாண்டவர்களின் மீது இருந்த அன்பால் அவர்கள் பொருட்டுப் பல வடிவங்கள் கொண்ட மேக நிறம் கொண்ட கிருஷ்ணனின் மருகனே, உன்னைப் புகழும் சிவ பக்தர்கள் நிரம்பி உள்ள விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே உன் அருளைத் தருவது ஒரு நாள் கிட்டுமோ?

படலை - கண் பூவால் மறைக்கப்படுவது
நரை கொக்கின் நிறமாகி
தலைமயிர் கொக்குக் கொக்க நரைத்து..... திருப்புகழ், தலைமயிர்
விருத்தாசலம் - விருத்த கிரி - முது குன்றம் - பழ மலை
சாவாதார் பிறவாதார் தவமே மிக உடையார்
மூவாத பல் மமுனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே
-சம்பந்தர் தேவாரம்
அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே
மாயவனும் அன்பின் மனமறிவான் கட்டுக என
றாய வடிவுபதி னாறாயிரங் கொண்டான்
தூயவனும் மூலமாந் தோற்ற முணர்ந்தெவ்வுலகுந்
தாய அடியிணைகள் தன் கருத்தினாற் பிணித்தான்
---- வில்லி பாரதம், கிருஷ்ணன்தூது

Last edited by soundararajan50; 27-07-18, 08:25.