307.குடல்நிண
307விஜயபுரம்
(திருவாரூர் அருகில் உள்ளது)
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன தனதான
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய மலமாசு
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
குமிழியி னுங்கடி தாகியெ யழிமாய
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
லவுடத மும்பல யோகமு முயலாநின்
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
னழகிய தண்டைவி டாமல ரடைவேனோ
இடமற மண்டுநி சாசர ரடையம டிந்தெழு பூதர
மிடிபட இன்பம கோததி வறிதாக
இமையவ ருஞ்சிறை போயவர் பதியுளி லங்கவி டாதர
எழில்பட மொன்றுமொ ராயிர முகமான
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
வெயில்நகை தந்தபு ராரிம தனகோபர்
விழியினில் வந்துப கீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
ஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

குடல், கொழுப்பும நரம்பு, ஊன் இவைகளைத் தோலின் இடையே வைத்து மூடி, மலமும் மற்ற அழுக்குகளும் பொதிந்துள்ள உடலை விரும்பி, பயனற்ற மருந்துகளையும் யோக முறைகளையும் கையாண்டு, வேதனைப்படும் துன்பம் போதும் போதும் இதை உணர்ந்து என்று தான் நான் உன் திருவடியை அடைவேனோ?
நெருங்கி போருக்கு வந்த அசுரர்கள் மடியவும், எழு மலைகள் பொடிபடவும், கடல் வற்றவும், தேவர்கள் சிறை மீண்டு, தங்கள் பதிக்குப் பேகவும், உதவி செய்தவனே ஆதிசேடன், மேருமலையாகிய வில்லில் நாணாகப் பூட்டப்பட்டு, அந்த வில் வளைபடு முன்னரே, திரிபுரங்களையும் மன்மதனையும் எரித்த சிவபெருமானுடைய கண்ணில் தோன்றி, கங்கையால் வளர்க்கப்பட்ட சிறுவனே விஜய புரத்தில் வாழும் பெருமாளே உன் திருவடியை என்று பெறுவேனோ?

அடலை உடம்பை அவாவி
அடலை - துன்பம்
அடலைக் கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் - திருநாவுக்கரசர் தேவாரம்
எழு பூதரம் இடிபட
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
ரும்போய் மங்கப் பொருகோபா - திருப்புகழ், வெங்காளம்
புர நீறெழ வெயில் நகை தந்த புராரி
அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
அயனை முடித்தலை யரியு மழுக்கையன் --- திருப்புகழ், குருவியென
மதனகோபர் விழியினில் வந்து
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி
னாட்ட மறசர ணீட்டி மதனுடல் .... திருப்புகழ், பாட்டிலுரு