Announcement

Collapse
No announcement yet.

Lies told by Krishna to Godha -

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Lies told by Krishna to Godha -

    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


    மாலாய்ப் பிறந்த நம்பியை
    மாலே செய்யும் மணாளனை
    ஏலாப் பொய்களுரைப்பானை
    இங்கே போதக்கண்டீரே?


    மேலால் பரந்த வெயில் காப்பான்
    வினதை சிறுவன் சிறகென்னும்
    மேலாப்பின் கீழ்வருவானை
    விருந்தாவனத்தே கண்டோமே


    கோதை இந்த வரிகளை கூறக் கேட்டு கண்ணன் எதிரில் வந்தான்.
    "ஏலாப்பொய்கள் உரைப்பான் என்று என்னைக் கூறினாயே, நான் எங்கே பொய் சொன்னேன்? என்றான்.


    கோதை " இதுவே மிகப் பெரிய பொய் அல்லவா? "
    " நீ கூறின பொய்கள் ஒன்றா இரண்டா? எல்லோர் வீட்டிலும் வெண்ணை திருடித் தின்றாய். உன் அன்னை கேட்டபோது இல்லவே இல்லை என்று நீ கூறவில்லை" என்றாள்.


    " நான் திருடினேன் என்று யார் சொன்னது? இந்த உலகமே எனக்கு சொந்தம் அல்லவா? என் பொருளை நான் எடுத்துக் கொண்டேன் " என்றான் அந்த மாயக்கள்ளன்.,


    " பல பேர் அதற்காக சந்தோசம் அல்லவா கொண்டார்கள் ? ஏனென்றால் நான் அவர்கள் இதயத்தை வெண்ணை போல மிருதுவாகச் செய்து அதை எடுத்துக் கொண்டேன். அதை அறியாதவர்கள் நான் என்னமோ வெண்ணையை திருடிவிட்டதாக நினைத்து குற்றம் சாட்டினார்கள். " என்றான் கண்ணன்.


    "அது சரி. ஆனால் உன்னை கையும் களவுமாகப பிடித்த கோபியிடம் தயிர்ப் பானைக்குள் கன்றுக் குட்டியை தேடியதாகக் கூறினாயே அது பொய் அல்லவா?" என்றாள் கோதை.


    மனதை மயக்கும் முறுவலுடன் கண்ணன் கேட்டான் " நான் நினைத்தால் ஒரு தயிர் பானைக்குள் கன்றுக்குட்டியை வைக்க முடியாதோ? ஆலிலையில் சயனித்தபோது என் வயிற்றில் இந்த உலகம் அடங்கவில்லையா?"


    "சரி. ஆனால் இதற்கு என்ன சொல்கிறாய் ? நீ மண்ணைத் தின்றபோது பலராமன் அன்னையிடம் கூற, இல்லவே இல்லை என்று பொய் சொல்லவில்லையா" என்ற கோதையிடம் கண்ணன் கேட்டான் , " அன்னை காணும்போது என் வாயில் மண் இருந்ததா?" என்று.


    "இல்லை அவள் இந்த ஈரேழு புவனங்களையும் அல்லவா பார்த்தாள்! என்று உவகையுடன் கூறினாள் கோதை.
    " பார்த்தாயா நான் கூறினது பொய் அல்லவே ," என்றான் கண்ணன்.
    கோதை சொன்னாள். " ஆனால் லீலாசுகர் அன்னை உன் வாயில் வெண்ணை, பால் மற்றும் மண் இவைகளைப பார்த்த்ததாகக் கூறுகிறாரே ?"
    " அவரே கைலாச மலையை வெண்ணை என்றும், பூமியை மண் என்றும் பாற்கடலை பால் என்றும் நினைத்துக் கொண்டாள் என்று அல்லவா கூறினார் ." என்றான் கண்ணன்.


    கோதை தன்னை கோபியாக பாவித்துக் கூறினாள்,
    " ஆனாலும் நீ ஏமாற்றுக்காரன்தான். உன் மீது கொண்ட அன்பினால் நாங்கள் அனுபவித்த இன்னல்கள் எத்தனை? " என்றாள்.


    " என்னோடு ராசக்ரீடையில் இன்பம் அனுபவித்தும் இப்படிக் கூறுவது நியாயமா? " என்றான் கண்ணன்.
    " ஆனால் அதற்கு முன்பு எங்களை எவ்வளவு படுத்தினாய்? பௌர்ணமியன்று குழல் ஊதுவேன் நீங்கள் வரவேண்டும் என்று சொல்லிவிட்டு வந்த எங்களை ன்'நீங்கள் வந்தது தவறு திரும்பிப் போய்விடுங்கள் ' என்றாய். "


    அதற்குக் கண்ணன் சிரித்து, அது உங்கள் அன்பை சோதிக்கவே, உண்மையில் என் உயிருக்குயிரான உங்களை திருப்பி அனுப்பி விடுவேன் என்று நினைத்தீர்களா ?" என்றான் .


    " ஆமாம் அதனால்தான் எங்களை விட்டு மறைந்தாயோ? நாங்கள் எவ்வளவு துன்பம் அனுபவித்தோம் என்று அறிவாயோ? என்றால் கோபிகையான ஆண்டாள்.
    அது உங்கள் அன்பை பலப் படுத்தி, நான் என்ற நினைவை அகற்றி என்வயப்படுத்தவே ," என்றான் கண்ணன்.


    "நான் எப்போதும் உங்களுடன் தானே இருக்கிறேன்? அப்படி இருக்க என்னை எவ்வாறு பிரிய இயலும்?" என்ற கண்ணனைப் பார்த்து,


    "இதுதான் எல்லாவற்றிற்கும் சிகரமான பொய். உண்மையில் எங்களிடம் அன்பிருந்தால் எங்களைப் பிரிந்து மதுரைக்கு சென்றிருப்பாயா? " என்ற கோதையை அன்புடன் பார்த்து, " நான்தான் உன் அந்தராத்மா என்பதை அறியாயோ? அப்படி இருக்க நமக்குள் பிரிவு எது ? என்றான் கண்ணன்.
Working...
X