306.ஈயெறும்புநரி
306வாலிகொண்டபுரம்
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன
தான தந்ததன தான தந்ததன தந்ததான
ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
காக முண்பவுட லேசு மந்துஇது
ஏல்வதென்றுமத மேமொ ழிந்துமத வும்பல்போலே
ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
மேவி நம்பியிது போது மென்கசில
ரேய்த னங்கள் தனி வாகுசிந்தைவச னங்கள்பேசிச்
சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
வீச மங்கையர்க ளாட வெண்கவரி
சீற கொம்புகுழ லு\த தண்டிகையி லந்தமாகச்
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
சேவை கண்டுனது பாத தொண்டனென அன்புதாராய்
சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
சூரி யன்புரவி தேர்ந டந்துநடு பங்கினோடச்
சோதி யந்தபிர மாபு ரந்தரனு
மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத லன்புகூர
வாது கொண்டவுணர் மாள செங்கையயி
லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
மாதர் சிந்தைகளி கூர நின்றுநட னங்கொள்வோனே
வாச கும்பதன மானை வந்துதினை
காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
வாலி கொண்டபுர மேய மர்ந்துவளர் தம்பிரானே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

ஈ, எறும்பு, நாய், கழுகு, பேய், காகம் இவைகள் உண்ணும் இந்த உடலை நான் சுமந்து, இது தக்கது என்று எண்ணி, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து, ஆணவமான மொழிகளைப் பேசிப் பெரிய வாழ்வைக் கொண்டு திரியும் ஆசை வெந்து அழியவும், உன் மீதுள்ள ஆசை மிகவும், உனது தரிசனத்தைப் பார்த்து உன் திருவடித் தொண்டன் என்னும் அன்பைத் தருவாய்
அசுரர்களை அழித்து, சூரியன் மீண்டும் நேர்வழியில் செல்லச் செய்து, சிவனும் தேவர்களும் சூழ்ந்து நிற்க நடனம் ஆடியவனே, மான் போன்ற வள்ளியிடம் வந்து தினைப் புனத்தைக் காவல் செய்த முருகனே, உனது பாதத் தொண்டன் என்று அன்பு தருவாய்

சூரியன் புரவி தேர்
சூரசம்மாரம் ஆன பிறகு தான், பாதை தவறிய சூரியன் தேர், மீண்டும் நடு நேராகப் போக முடிந்தது என்பது பொருள்
நடனம் கொள்வோனே
இந்த நடனம் அசுரர்களைச் அழித்த பின் முருக வேள் போர்க்களத்தில் குடையைத் தாழ்த்தி ஆடும் கூத்தைக் குறிக்கும் (குடைக்கூத்து)
படைவீழ்த் தவுணர் பையு ளெய்தக்
குடைவீழ்த் தவர்மு னாடியக் குடையும் --- சிலப்பதிகாரம்
தினை காவல் கொண்ட முருகோனே
மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி தொண்டினோனே
-- திருப்புகழ், அலைகடல்சிலை