Narasimhar - Poem in tamil
Courtesy:Smt.Padma Gopal
(நமக்கானான் நரசிம்மன்..)
தானே, தன்னைத் தான்−
தூணிலே பிறப்பித்தான்;
ஊனுறை உயிர் நடுங்க−
உயர்ந்தவனெனக் காண்பித்தான்!
எத்தனையோ வடிவெடுத்து−
எல்லாமாய் வ்யாபித்தான்;
அத்தனையும் அவனென்றே−
அறிந்தோரை, அனுக்ரஹித்தான்!
சினமென்னும் அரிதாரம்−
சிறியோர்க்காய் தானேற்றான்;
தினம் அவனைத் துதிப்போர்க்கு−
தித்திப்பாய், தனைக் கொடுத்தான்!
வரமெல்லாம் தருமுள்ளம்−
நரசிம்மம் ஆனதிங்கே;
கரம் கூப்பித் தொழுவோம் நாம்;
பரன் பரிவான் நமக்காங்கே!
பயமில்லை இனி நமக்கே;
ஜெயம் உண்டே, அவனிருக்க!
நயந்தேத்தி அடிபணிவோம்;
ஐயன் அருளுக்கு, ஆட்படுவோம்!
Courtesy:Smt.Padma Gopal
(நமக்கானான் நரசிம்மன்..)
தானே, தன்னைத் தான்−
தூணிலே பிறப்பித்தான்;
ஊனுறை உயிர் நடுங்க−
உயர்ந்தவனெனக் காண்பித்தான்!
எத்தனையோ வடிவெடுத்து−
எல்லாமாய் வ்யாபித்தான்;
அத்தனையும் அவனென்றே−
அறிந்தோரை, அனுக்ரஹித்தான்!
சினமென்னும் அரிதாரம்−
சிறியோர்க்காய் தானேற்றான்;
தினம் அவனைத் துதிப்போர்க்கு−
தித்திப்பாய், தனைக் கொடுத்தான்!
வரமெல்லாம் தருமுள்ளம்−
நரசிம்மம் ஆனதிங்கே;
கரம் கூப்பித் தொழுவோம் நாம்;
பரன் பரிவான் நமக்காங்கே!
பயமில்லை இனி நமக்கே;
ஜெயம் உண்டே, அவனிருக்க!
நயந்தேத்தி அடிபணிவோம்;
ஐயன் அருளுக்கு, ஆட்படுவோம்!