Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    304.தாமரையின்மட்டு
    304வயலூர்
    தானதன தத்த தானதன தத்த
    தானதன தத்த தனதான
    தாமரையின் மட்டு வாசமல ரொத்த
    தாளிணைநி னைப்பி லடியேனைத்
    தாதவிழ்க டுக்கை நாகமகிழ் கற்ப
    தாருவென மெத்தி யவிராலி
    மாமலையி னிற்ப நீகருதி யுற்று
    வாவெனஅ ழைத்தென் மனதாசை
    மாசினைய றுத்து ஞானமுத ளித்த
    வாரமினி நித்த மறவேனே
    காமனையெ ரித்த தீநயன நெற்றி
    காதியசு வர்க்க நதிவேணி
    கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
    காதுடைய அப்பர் குருநாதா
    சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
    சோலைபுடை சுற்று வயலூரா
    சூடிய தடக்கை வேல்கொடுவி டுத்து
    சூர்தலை துணித்த பெருமாளே



    பதம் பிரித்து உரை

    தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த
    தாள் இணை நினைப்பு இல் அடியேனை


    தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த - தாமரையின் நறு மணம் வீசும் மலருக்கு ஒப்பான தாள் இணை நினைப்பு இல் - (உனது) இரண்டு திருவடிகளின் நினைப்பே இல்லாதஅடியேனை - அடியேனை


    தாது அவிழ் கடுக்கை நாக(ம்) மகிழ் கற்ப
    தாரு என மெத்திய விராலி


    தாது அவிழ் கடுக்கை - மகரந்தப் பொடி விரியும் கொன்றைநாகம் - சுர புன்னை மகிழ் - மகிழ மரம் (முதலியவை) கற்ப தாரு - கற்பக விருட்சம் என - என்று சொல்லும்படியாக மெத்திய - மிகுந்த விராலி - விராலி என்கின்ற


    மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று
    வா என அழைத்து என் மனது ஆசை


    மா மாலையில் நிற்ப - சிறந்த மலையில் வீற்றிருக்கின்றோம் நீ கருதி உற்று வா - நீ கருத்தில் கொண்டு வருவாயாக என அழைத்து - என்று என்னை அழைத்து என் மனது அசை - என்னுடைய மனதில் உள்ள ஆசைகளையும்


    மாசினை அறுத்து ஞான அமுது அளித்த
    வாரம் இனி நித்தம் மறவேனே


    மாசினை - (என்) குற்றங்களையும் அறுத்து - ஒழித்து ஞான அமுது அளித்த - ஞான அமுதத்தை எனக்குத் தந்த வாரம் -அன்பை இனி நித்தம் - இனி எந்நாளும் மறவேனே - மறக்க மாட்டேன்


    காமனை எரித்த தீ நயன நெற்றி
    காதிய சுவர்க்க நதி வேணி


    காமனை எரித்த - மன்மதனை எரித்த தீ நயன நெற்றி -நெருப்புக் கண்ணை உடைய நெற்றியையும் காதிய -எல்லாவற்றையும் அழிக்க வல்லதான சுவர்க்க நதி - ஆகாய கங்கையைச் சூடியுள்ள வேணி - சடையையும்


    கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட
    காது உடைய அப்பர் குருநாதா


    கானில் உறை - காட்டில் இருக்கும் புற்றில் ஆடும் - புற்றில் படம் எடுத்து ஆடுகின்ற பணி - பாம்பை இட்ட - அணிந்த காது உடைய அப்பர் - காதுகளைக் கொண்ட சிவபெருமானுக்கு குரு நாதா - குரு நாதரே


    சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க
    சோலை புடை சுற்று வயலூரா


    சோமனொடு - சந்திரனோடு அருக்கன் - சூரியனும் மீன் உலவும் - நட்சத்திரங்களும் உலவும் (அளவுக்கு) மிக்க -உயர்ந்த சோலை புடை சுற்றும் - சோலைகள் பக்கங்களில் சுற்றியுள்ள
    வயலூரா - வயலூரில் வாழ்பவனே


    சூடிய தடக் கை வேல் கொடுவித்து
    சூர் தலை துணித்த பெருமாளே


    தடக்கை சூடிய - அகன்ற திருக் கரத்தில் ஏந்திய வேல் கொடு விடுத்து - வேலைச் செலுத்தி சூர் தலை துணித்த பெருமாளே - சூரனுடைய தலையை வெட்டித் துணித்த பெருமாளே



    சுருக்க உரை

    விளக்கக் குறிப்புகள்
    காதிய சுவர்க்க நதி
    பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு பரமேசர் – திருப்புகழ், அழகுதவிழ்


    புற்றிலாடு பணி இட்ட காதுடைய அப்பர்


    புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
    பற்றி வாழும் பரமனைப் பாடிட - சம்பந்தர் தேவாரம்
Working...
X