304.தாமரையின்மட்டு
304வயலூர்
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த தனதான
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணைநி னைப்பி லடியேனைத்
தாதவிழ்க டுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவெனஅ ழைத்தென் மனதாசை
மாசினைய றுத்து ஞானமுத ளித்த
வாரமினி நித்த மறவேனே
காமனையெ ரித்த தீநயன நெற்றி
காதியசு வர்க்க நதிவேணி
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று வயலூரா
சூடிய தடக்கை வேல்கொடுவி டுத்து
சூர்தலை துணித்த பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
304வயலூர்
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த தனதான
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணைநி னைப்பி லடியேனைத்
தாதவிழ்க டுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவெனஅ ழைத்தென் மனதாசை
மாசினைய றுத்து ஞானமுத ளித்த
வாரமினி நித்த மறவேனே
காமனையெ ரித்த தீநயன நெற்றி
காதியசு வர்க்க நதிவேணி
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர் குருநாதா
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
சோலைபுடை சுற்று வயலூரா
சூடிய தடக்கை வேல்கொடுவி டுத்து
சூர்தலை துணித்த பெருமாளே
பதம் பிரித்து உரை

சுருக்க உரை
தாமரை மலர் போன்று மணக்கும் உனது இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, செழிப்பான விராலி மலையில் வீற்றிருக்கின்றோம், அங்கு வந்து எம்மைத் தரிசிக்கவும் என்று என்னை அழைத்து, என் ஆசைகளையும், குற்றங்களையும் அழித்து, ஞான அமுதத்தைக் கொடுத்த உன் கருணையை என்றும் மறக்க மாட்டேன்
மன்மதனை எரித்த நெற்றிக் கண்ணை உடையவரும், ஆகாய கங்கையைச் சூடிய சடையையும், பாம்பு அணிந்த காதுகளை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு குரு நாதரே உயர்ந்த சோலைகள் சூழ்ந்த வயலூரில் வாழ்பவனே திருக் கரத்தில் ஏந்திய வேலைச் செலுத்திச் சூரனுடைய தலையைத் துணித்த பெருமாளே எனக்கு ஞானம் அளித்த உன் கருணையை நான் என்றும் மறவேன்

காதிய சுவர்க்க நதி
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு பரமேசர் – திருப்புகழ், அழகுதவிழ்
புற்றிலாடு பணி இட்ட காதுடைய அப்பர்
புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிட - சம்பந்தர் தேவாரம்
பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு பரமேசர் – திருப்புகழ், அழகுதவிழ்
புற்றிலாடு பணி இட்ட காதுடைய அப்பர்
புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிட - சம்பந்தர் தேவாரம்