301. அரிமருகோனே
வயலூர்
உபதேசம் பெற வேணும்
தனதன தானான தானந் தனதன தானான தானந்
தனதன தானான தானந் தனதான
அரிமரு கோனேந மோவென் றறுதியி லானேந மோவென்
ற]றுமுக வேளேந மோவென் றுனபாதம்
அரகர சேயேந மோவென் றிமையவர் வாழ்வேந மோவென்
றருணசொ ரூபாந மோவென் றுளதாசை
பரிபுர பாதாசு ரேசன் றருமக ணாதாவ ராவின்
பகைமயில் வேலாயு தாடம் பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
பதிபசு பாசோப தேசம் பெறவேணும்
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
கடினசு ராபான சாமுண் டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனாப தீயென்
களமிசை தானேறி யேயஞ் சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும் பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
குளிர்வய லூராழி மேவும் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

திருமாலின் மருகனே, முடிவில்லாதவனே, ஆறுமுக வேலனே, உன்னை வணங்குகிறேன் என்று துதித்து உன்னை வணங்க எனக்கு ஆசை இருக்கிறது சிலம்பு அணிந்த பாதனே, தேவசேனையின் கணவனே, பாம்புக்குப் பகையான மயில் வாகனனே, வேலாயதத்தை ஏந்தும் கோலாகலனே என்று ஒரு நாளும் சிறிதளவாகிலும் சொல்லாத அறியாத ஏழையாகிய நான், உன் திருவாயால் பதி, பசு, பாச ஞானத்தைப் பற்றிய உபதேச மொழியைப் பெற வேண்டும்
கையில் சூலாயுதத்தைக் கொண்டவனே, கடல் போல் ஆரவாரம் செய்து, கள்ளுண்டு துர்க்கை பயிரவி ஆட,போர்க்களத்தில் நீ புகுந்தவுடன், சூரன் அஞ்சி கூச்சலிட,நாயும், பேயும், கழுகும் பிணங்களின் குடலைக் கீறித் தின்ன, சண்டை செய்த பல தோள்களை உடையவனே, கடல் போல் பரவி வரும் காவிரி ஆறு சூழ்ந்துள்ள வயலூரில் வீற்றிருக்கும் பெருமாளே நான் உபதேசம் பெற வேண்டுகிறேன்

அருண சொரூபா நமோ
முருகவேள் செந்நிறத்தவன்
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் --- திருமுருகாற்றுப்படை
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
செக்கர்நிற மாயி ருக்கும் பெருமாளே ---- திருப்புகழ், எத்தனைலாதி
பதிபசு பாசோப தேசம் பெறவேணும்
பதி - கடவுள் பசு - சீவாத்மா பாசம் - மும்மலம் பதி ஞானம் - இறைவனைப்பற்றிய அறிவு
பசு ஞானம் - ஆன்ம சொரூப ஞானம் - பாச ஞானம் - வாக்குகளாலும் கலை ஞானத்தாலும் அறியும் அறிவு
பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும்
பார்ப்ரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே
நேச மொடும் உள்ளத்தே நாடி --- சிவஞான சித்தி
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணுகிற்பசு பாசம் நிலாவே ----திருமந்திரம்
கரதல சூலாயுதா
முருகவேளுக்குச் சூலாயுதமும் உண்டு
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் திருமார்பும் --- திருப்புகழ், காலனார்வெங்
படர் நதி காவேரி சூழுங்
காவிரி கடல்க்லுக்கு ஒப்பிடப்பட்டது
கலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி --- சம்பந்தர் தேவாரம்
திரைக்க டற்பொரு காவிரி மாநதி ---திருப்புகழ், நிரைத்தநித்தல
வயலூர்
அருணகிரியார் திருப்புகழ் நித்தம் பாடும் அன்பை வயலுரில் அநுக்கிரகிக்கப் பெற்றனர்
பாத பங்கய முற்றிட வுட்கொண்
டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் தவனீயே --- திருப்புகழ், கோலகுங்கும
நமோ நமோ உன்னைத் திரும்பத் திரும்ப வணங்குகின்றேன் நாதவிந்துகலாதி, வேத வித்தகா, போத்கந்தரு, சீதளவாரிஜ, போத நிர்க்குண, ஓது முத்தமிழ் சரவண ஜாதா, அவகுண எனத் தொடங்கும் பாடல்களிலும் இவ்வாறு துதி செய்யப்பட்டுள்ன