Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    298.சிகர மருந்த
    298மாயாபுரி
    (ஹரித்துவாரம் எனப்படும்)
    தனன தனந்த தானன தனதான
    சிகர மருந்த வாழ்வது சிவஞானம்
    சிதறி யலைந்து போவது செயலாசை
    மகர நெருங்க வீழ்வது மகமாய
    மருவி நினைந்தி டாவருள் புரிவாயே
    அகர நெருங்கி னாமய முறவாகி
    அவச மொடுங்கை யாறொடு முனமேகிக்
    ககன மிசைந்த சூரியர் புகமாயை
    கருணை பொழிந்து மேவிய பெருமாளே



    பதம் பிரித்தல்

    சிகரம் அருந்த வாழ்வது சிவ ஞானம்
    சிதறி அலைந்து போவது செயல் ஆசை
    சிகரம் - (சிவாய நம என்னும் பஞ்சாக்ஷரத்தில் உள்ள) சி என்னும் மதுவை அருந்த - குடிப்பதால் (உச்சரிப்பதனால) வாழ்வது -
    உண்டாவது சிவ ஞானம் - சிவ ஞானமாகும்


    சிதறி அலைந்து போவது - (அத்தகைய உச்சரிப்பால்) சிதறுண்டு அழிந்து போவன செயல் - (மனம், வாக்கு, காயம் இவைகளின்) செயலும் ஆசை - ஆசைகளும் ஆகும்


    மகர நெருங்க வீழ்வது மக மாய(ம்)
    மருவி நினைந்திடா அருள் புரிவாயே
    மகர நெருங்க - (இறுதியில் உள்ள) ம என்னும் எழுத்து நெருங்குவதால் வீழ்வது - தொலைந்து போவது மக மாயம் - பெரிய மாயையாகும் மருவி - (உன்னைத்) தியானித்து நினைந்திடா - நினைப்பு, மறப்பு அற்ற நிலையை அருள் புரிவாயே - அருள் புரிவாயாக




    அகர(ம்) நெருங்கின் ஆமயம் உறவாகி
    அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி




    அகர(ம்) நெருங்கின் - (மகேந்திரபுரியின்) வீதிகளில் நெருங்கி வந்தால் ஆமயம் உறவாகி - நோய்க்கு (வருத்தத்துக்கு) இடம் பெற்று அவசமொடும் - மயக்கத்துடனும் கையாறொடும் - தன் செயல் அற்றும்
    முனம் - சூரனுடைய ஆட்சிக் காலத்தில் ஏகி - சென்று


    ககனம் இசைந்த சூரியர் புக மாயை
    கருணை பொழிந்து மேவிய பெருமாளே


    ககனம் இசைந்த - விண்ணில் பொருந்தியிருந்த சூரியர் - பன்னிரு ஆதித்தர்களும் புக - உன்னிடத்தில் சரண் புக மாயை - மாயா புரியில் வீற்றிருக்கும் (பெருமாளே) கருணை பொழிந்து மேவிய பெருமாளே - (அவர்களுக்குக்) கருணை புரிந்து வீற்றிருக்கும் பெருமாளே



    சுருக்க உரை

    விளக்கக் குறிப்புகள்
    1 சிகரம் அருந்த வாழ்வது
    புயப்பணி கடப்பந் தொடைச்சி கரமுற்றின்
    புகழ்ச்சிய முதத்தின் புலவோனே........ திருப்புகழ் -கரிக்குழல்


    2 மாயை மாயா புரி என்னும் தலம் சூரனது ஆட்சியில் சூரியர்கள் பட்ட துன்பத்தையும் பின்னர் முருக வேளால் அடைந்த சுகத்தையும் விளக்குகின்றன
    அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப்
    புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல்
    நிறுத்திய சிகரியூடு நெறிக்கொடு புக்கு வான்போய்
    எறித்தனை திரிதி நாளும் இளங் கதிர் நடாத்தி என்றான் - கந்த புராணம்
Working...
X