296.நீதத் துவமாகி
296மதுரை
தானத் தனதான
நீதத் துவமாகி நேமத் துணையாகிப்
பூதத் தயவான போதைத் தருவாயே
நாதத் தொனியோனே ஞானக் கடலோனே
கோதற் றமுதானே கூடற் பெருமாளே
பதம் பிரித்தல்
பத உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
296மதுரை
தானத் தனதான
நீதத் துவமாகி நேமத் துணையாகிப்
பூதத் தயவான போதைத் தருவாயே
நாதத் தொனியோனே ஞானக் கடலோனே
கோதற் றமுதானே கூடற் பெருமாளே
பதம் பிரித்தல்
பத உரை
நீதம் - நீதியில் துவம் ஆகி - நிலை பெற்றதாய் நேம - சீரிய ஒழுக்கத்தில் ஒழுக துணையாகி - துணை செய்வதாய்
பூதத்தயவான - எல்லா உயிர்களையும் தன்னைப் போல் எண்ணும் போதைத் தருவாயே - பெரிய ஞானத்தை தருவாயாக நாதத் தொளியோனே - ஓசை ஒளியாய் விளங்குபவனே ஞானக் கடலோனே - ஞானக் கடல் போன்றவனே கோது அற்ற - குற்றம் இல்லாத அமுதானே - அமுதம் போன்றவனே கூடல் பெருமாளே - மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே

நீதித் தன்மை கொண்டதாய், நன்னெறியில் ஒழுகத் துணை செய்வதாய், எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருதும் கருணை உள்ளதாய் விளங்கும் மூதறிவைத் தந்தருளுக ஓசை, ஒலியாய் விளங்குபவனே மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே
விளக்கக் குறிப்புகள்