Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    296.நீதத் துவமாகி
    296மதுரை
    தானத் தனதான
    நீதத் துவமாகி நேமத் துணையாகிப்
    பூதத் தயவான போதைத் தருவாயே
    நாதத் தொனியோனே ஞானக் கடலோனே
    கோதற் றமுதானே கூடற் பெருமாளே



    பதம் பிரித்தல்

    நீதம் துவம் ஆகி நேம துணையாகி
    பூத தயவான போதை தருவாயே
    நாதத்து ஒளியோனே ஞான கடலோனே
    கோது அற்ற அமுதானே கூடல் பெருமாளே



    பத உரை



    சுருக்க உரை
    நீதித் தன்மை கொண்டதாய், நன்னெறியில் ஒழுகத் துணை செய்வதாய், எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருதும் கருணை உள்ளதாய் விளங்கும் மூதறிவைத் தந்தருளுக ஓசை, ஒலியாய் விளங்குபவனே மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே



    விளக்கக் குறிப்புகள்

    1 பூதத்தயவு
    எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
    தெய்வ அருள் கருணை செய்வாய் பராபரமே -தாயுமானவர், பராபரக் கண்ணி
    2 நாதத் தொனியோனே
    ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே
    உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே - திருநாவுக்கரசர் தேவாரம்
Working...
X