295. கலைமேவு
295மதுரை
தனதான தானத் தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
295மதுரை
தனதான தானத் தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே
பதிஞான வாழ்வைத் தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் குமரேசா
சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
எல்லா கலைகளையும் தன்னுள் அடங்கியிருக்கும் ஞான ஒளியே
மூவாசைகளையும் கடந்து சமய வாதங்களில் மாறுபட்டுக் கிடக்காமல்,
இறைவனைப் பற்றிய சிவஞான வாழ்வைத் தந்து அருளுக
வள்ளி மலையில் வாழும் வள்ளி நாயகியின் மனத்தில் வீற்றிருப்பவனே, வில்லேந்திய வேடரே மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே எனக்குப் பதி ஞான வாழ்வைத் தந்து அருளுக

அ சிலை வேட
அயிலவ சமுடன் ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் டருள்வோனே --- திருப்புகழ், கடகடகருவிகள்,
பொய்யாமொழிப் புலவர் சிவனையே பாடும் வழக்கத்தினர் முருகனைப் பாடுக என்றால் கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ என்று ஆணவத்துடன் இருந்தார் முருகவேள் இவர் தனிமையாகப் போகும்போது வேடனாய் வழிமறித்துத் தன் பெயர் முட்டை என்று சொல்லி என் பெயரை வைத்துப் பாடினால் உன்னை விடுவேன் என வெருட்டினார் புலவர் பின் வரும் அகப் பொருள் கொண்ட பாடலைப் பாடினார்
பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குக் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளே - மின்போலு
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போய்
கானவேல் முட்டைக்குங் காடு
கள்ளி தீப்பட்டு பொறி பறக்குமாயின் வேல் முள் சாம்பராகப் போயிருக்குமே, அது எவ்வாறு தைக்கும்? நீ பாடிய பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்று முருகவேள் எள்ளி நகையாடினார்
விழுந்த துளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடு மென்றுஞ் - செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்துப் பெய்வேளையும் போயினளே
பொய்யா மொழிபகைஞர் போல் கோழிக் குஞ்சைப் பாடமாட்டேன் என்றாயே இப்போது முட்டையையும் பாடி விட்டாயே என்று கூறி புலவரை ஆட்கொண்டார்
ஆ மாயக் குறமாதின் மனம் மேவு
வனசர் கொம்பி னைத்தேடி யொருவேட
வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்
மறவர் குன்றி னிற்போன பெருமாளே --- திருப்புகழ் களவுகொண்டு