290. தலங்களில்
290பெருங்குடி
வயலூர் செல்லும் வழியில் சோமரசம் பேட்டைக்கு அருகில்
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
தனந்தன தனந்தன தனதான
தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
தழைந்தவு தரந்திகழ் தசமாதஞ்
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர் சிலகாலந்
துலங்கு நலபெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடுந்தொழி லுடன்தம க்ரகபாரஞ்
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
சுடும்பினை யெனும்பவ மொழியேனோ
இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன் முருகோனே
பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
ப்ரண்டக ரதண்டமிழ் வயலூரா
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை பெருமாளே
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்
1. பிறந்தனர் கிடந்தனர் இருந்தனர்
மனித வாழ்க்கையின் நிலையாமையைத் தமிழ்க் கவிதைகளில் பல இடங்களில் காணலாம்
நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் -சுந்தரர் தேவாரம்
புன்னினிமேல் நீர்போல் நிலையாமைஇன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலற
சென்றான் எனப்படுதலால் -நாலடியார்
2 இலங்கையில் இலங்கிய இலங்களுள்
அனுமன் வைத்த தீயை அருள் அற்ற வீடுகளை மட்டும் பற்றுமாறு கட்டளை இட்டது சிலப்பதிகாரச் செய்யுளை நினைவூட்டும்.
பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப் பெண்டிர்
மூத்தோர் குழவியெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தோர் பக்கமே சேர்க சிலப்பதிகாரம்

நல்ல வீடுகளில் இருந்து கொண்டு, தாயின் கர்ப்பத்தில் செம்மையாகத் தோன்றி, பத்து மாதங்களுக்குப் பின் பிறந்து, படுக்கையில் குழந்தையாகக் கிடந்து, உட்கார்ந்து, தவழ்ந்து, நடை பழகி, நடந்து, சில காலம் கழித்து, பெண்கள் மீது மோகம் கொண்டு, இல்லற வாழ்க்கை நடத்தி, தமக்குரிய தொழிலைச் செய்து, பின்னர் உடல் வளம் குன்றி, வலிமை இழந்து, இறந்தவுடன், பிணத்தைச் சுட்டு எரிக்கவும் என்று பலர் கூறும் இப்பிறவியை ஒழிக்க மாட்டேனோ?
இலங்கையில் அருள் அற்ற எல்லா வீடுகளையும் பற்றி எரிக்குமாறு அக்கினி தேவனுக்குக் கட்டளை இட்ட, அனுமனுடன், கடல் நடுங்க எழுந்தருளிய திருமாலின் மருகனே கிரௌஞ்ச மலை அசைய வேலைச் செலுத்தியவனே தண் தமிழ் விளங்கும் வயலுரானே பெருங்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே என் பிறப்பை ஒழிக்க வேண்டுகிறேன்.