Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    286.விழுதாதெனவே
    286நாகபட்டினம்
    இறைவா எதுதா அதுதா தனையே
    என வேண்டுகோள்
    தனனா தனனா தனனா தனனா
    தனனா தனனா தனதான


    விழுதா தெனவே கருதா துடலை
    வினைசேர் வதுவே புரிதாக
    விருதா வினிலே யுலகா யதமே
    லிடவே மடவார் மயலாலே
    அழுதா கெடவே அவமா கிடநா
    ளடைவே கழியா துனையோதி
    அலர்தா ளடியே னுறவாய் மருவோ
    ரழியா வரமே தருவாயே
    தொழுதார் வினைவே ரடியோ டறவே
    துகள்தீர் பரமே தருதேவா
    சுரர்பூ பதியே கருணா லயனே
    சுகிர்தா வடியார் பெருவாழ்வே
    எழுதா மறைமா முடிவே வடிவே
    லிறைவா எனையா ளுடையோனே
    இறைவா எதுதா வதுதா தனையே
    இணைநா கையில்வாழ் பெருமாளே.



    பதம் பிரித்தல்

    விழு தாது எனவே கருதாது உடலை
    வினை சேர்வதுவே புரிதாக
    விழு தாது எனவே - விழுகின்ற சுக்கிலம் என்று. (தாது – ரசா, இரத்தம், எலும்பு, சுக்கிலம், தசை, தோல், மூளை, ஆகிய சப்த தாதுக்கள் எனவும் கொள்ளலாம்) கருதாது உடலை - உடலைக் கருதாமல். வினை சேர்வதுவே - வினை பெருகுவதையே. புரிதாக - விரும்புவதாய்.


    விருதாவினிலே உலகாயதம் மேல்
    இடவே மடவார் மயலாலே
    விருதாவினிலே - வீணாக. உலகாயதம் மேல் இடவே
    - போகம், மோட்சம் என்னும் புத்தி மேலிட்டதனால். மடவார் மயலாலே - மாதர்களின் மோகம் காரணத்தால்.


    அழுது ஆ கெடவே அவமாகிட நாள்
    அடைவே கழியாது உனை ஓதி
    அழுது ஆ கெடவே - அழுது ஐயோ கெட்டுப் போயும். அவமாகிட - வீணாக. நாள் அடைவே - என் வாழ் நாள் முழுமையும். கழியாது - நான் காலத்தைக் கழிக்காமல். உனை ஓதி - உன்னைப் புகழ்ந்து துதித்து.


    அலர் தாள் அடியேன் உறவாய் மரு ஓர்
    அழியா வரமே தருவாயே
    அலர் தாள் - மலர் உற்ற உன் திருவடியே. அடியேன் உறவாய் - அடியேனுக்கு உற்ற பற்றுக்கோடாய். மரு - கூட்டிவைக்கும். ஓர் - ஒப்பற்றதும். அழியா வரமே தருவாயே - அழியாததுமான வரத்தைத் தந்து அருளுக.


    தொழுதார் வினை வேர் அடியோடு அறவே
    துகள் தீர் பரமே தரு தேவா
    தொழுதார் - தொழுகின்ற அடியார்களுடைய. வினை - வினையின். வேர் - வேர். அடியோடு அறவே - அடியோடு அற்றுப் போக. துகள் தீர் - குற்றமற்ற. பரமே தரு தேவா - மேலான பதவியைத் தருகின்ற தேவனே.


    சுரர் பூபதியே கருணை ஆலயனே
    சுகிர்தா அடியார் பெரு வாழ்வே
    சுரர் பூபதியே - தேவர்களின் அரசே. கருணை ஆலயனே - கருணைக்கு இருப்பிடமானவனே. சுகிர்தா - புண்ணியனே. அடியார் பெரு வாழ்வே - அடியார்களுடைய பெரு வாழ்வே.


    எழுதா மறை மா முடிவே வடி வேல்
    இறைவா எனை ஆளுடையோனே
    எழுதா மறை - வேதத்தின். மா முடிவே - சிறந்த முடிவுப் பொருளே. வடி வேல் - கூரிய வேலை ஏந்தும். இறைவா - இறைவனே. என்னை ஆளுடையோனே - என்னை ஆட்கொண்டுள்ளவனே.


    இறைவா எதுதா அதுதா தனையே
    இணை நாகையில் வாழ் பெருமாளே.


    இறைவா - கடவுளே. எதுதா அதுதா - நீ எதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயோ அதைக் கொடுத்து அருளுக (எனக்கென்று ஒரு விண்ணப்பமும் இல்லை). தனையே இணை - தனக்குத் தானே இணை - நிகரான. நாகையில் வாழ் பெருமாளே - நாகபட்டினத்தில் வாழ்கின்ற பெருமாளே.



    சுருக்க உரை





    விளக்கக் குறிப்புகள்
    உலகாயதம் மேல் இடவே...
    உடலே ஆத்மா, போகமே மோட்சம் என்ற கொள்கை உடைய மதம்.


    எழுதா மறை மா முடிவே...
    எழுதா மறை - வேதம். எழுதப்படாமல் வாய் மூலமாகவே தலை முறை தலை முறையாக வந்தது. எழுதும் மறை தேவாரத்தை உணர்த்தும்.
    எதுவாவது தா தனையே....



    ஒப்புக
    மனதாலே இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
    இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
    இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர இசைவாயே....... .திருப்புகழ்,விடுங்கைக்கு.


    வேண்டியவற்கு


    வேண்டத் தக்க தறிவோய் நீ
    வேண்ட முழுதும் தருவோய் நீ. ..திருவாசகம் (குழைத்தபத்து)
Working...
X