284.தாரகாசுரன்
284தேவனூர்
(செஞ்சிக்கு அருகில் உள்ளது)
தான தான தந்த தந்த தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த தனதான
தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
சாதி பூத ரங்கு லுங்க முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்க டம்ப மததாரை
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
மானை யாளு நின்ற குன்ற மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை சிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
பானல் கூவி ளங்க ரந்தை அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
சீத ளார விந்த வஞ்சி பெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

தாரகாசுரன் தன் குலத்தோடு அழியவும், பெரிய மேருமலை நடுநடுங்கிக் குலையவும், கடல் தீக்கொள்ளவும், கூரிய வேலைச் செலுத்திய கடம்பனே. மலை போன்ற ஐராவதமாகிய யானையின் மீது வரும் தேவசேனையும், வள்ளி மலையில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியும் ஆசை கொண்டவனே, சிறந்த மயில் வாகனனே என்றும் கூறி, என் ஆவல் தீர உன்னை எப்போது புகழ்வேனோ?
உமா தேவியின் கொங்கைகள் பதியும் மார்பினரும், கங்கை, கபாலம், கொன்றை, தும்பை, அறுகம் புல், எலும்பு ஆகியவற்றைத் தரித்தவரும் ஆகிய சிவ பெருமானின் இடப் பாகத்தில் உறையும் பார்வதியின் பெருஞ் செல்வமே, தேவனூரில் சிறப்பு உற்று விளங்கும் பெருமாளே, உன் புகழை நான் பாடும் நாள் எப்போது எனக்குக் கிட்டுமோ?

சாக ரோதை யங் குழம்பி நீடு தீகொளுந்த...
ஒப்புக : வேல் பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்...கந்தர் அலங்காரம்
பாரமார் தழும்பர் ...
கலைகள ணெக்கொந் தடர்ந்து வம்பலர்
நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
கருக இடத்திற் கலந்தி ருந்தவள் கஞ்சபாதங்...திருப்புகழ் -சலமலம்.
செம்பொன் மேனியாளர்...
பொன் இயலும் திருமேனிதன் மேல் புரி நூல்பொலிவித்து...சம்பந்தர் தேவாரம்.