282.ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
282தேவனூர்
செஞ்சி- சேத்துப்பட்டு வழி.
இந்தத் திருப்புகழ் பரம்பொருளை உணரக் கூடிய மார்க்கத்தை அழகாகக் கூறுகிறது.
தான தான தந்த தந்த தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த தனதான
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆர ணாக மங்க டந்த கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி யொருதானாய்
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
யான வாவ டங்க என்று பெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வந்த
வாரி மேல்வெ குண்ட சண்ட விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல் புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

தொண்ணூற்று ஆறு தத்துவங்களுக்கும் வேறாக விளங்குவதும், வேதம் ஆகமம் இவைகளுக்கு அப்பாற் பட்டதும், சொல்லுதற்கு அரிதாக உண்மையான மூல காரணம் வேறு இல்லாமல் ஒப்பற்ற தனியாக நின்று, எல்லாமாய் விளங்குவதுமான, மனம் கடந்த மோன இன்ப வீட்டை அடைந்து, மனம் ஒடுங்கி, என்ஆசைகள் எல்லாம் அடங்கும்படியான நிலையை நான் என்று பெறுவேனோ?
பகைவர்களாகிய அசுரர்கள் சேனைகள் மடிந்து அழிய கூர்மையான வேலை எய்தியவனே, கொன்றை, தும்பை மாலைகளையும், பாம்பு, கங்கை ஆகியவற்றையும் சடையில் தரித்த சிவபெருமானுக்குக் குரு மூர்த்தியே, தேவர்கள் வணங்கும் பெருமாளே. என் ஆசைகள் அடங்குவது எப்போது?