Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    281. இறையத்தனையோ
    281திலதைப் பதி
    (பூந்தோட்டம அருகில். இத்தலம் மருவி செதலைப்பதி என தற்சமயம் வழங்கப்படுகிறது. கந்தன் குடி, அம்பர் திருமாகாளம், திருவீழிமிழலை, கூந்தலூர் அருகில் உள்ள ஸ்தலங்கள்)
    தனனத் தனனா தனதான
    இறையத் தனையோ அதுதானும்
    இலையிட் டுணலேய் தருகாலம்
    அறையிற் பெரிதா மலமாயை
    அலையப் படுமா றினியாமோ
    மறையத் தனைமா சிறைசாலை
    வழியுய்த் துயர்வா னுறுதேவர்சிறையைத் தவிரா விடும்வேலா
    திலதைப் பதிவாழ் பெருமாளே.

    பதம் பிரித்து உரை

    இறை அத்தனையோ அது தானும்
    இ(ல்)லை இட்டு உணல் ஏய் தரு காலம்


    இட்டு உணல் - ஒருவருக்கு இட்ட பின் உண்ணுதல் என்னும் அற நெறி இறை அத்தனையோ - அணுவை ஒத்த(கொஞ்சமேனும்) அது தானும் - அவ்வளவு கூட
    இ(ல்)லை - என்னிடத்தில் இல்லை ஏய் தரு காலம் - இங்ஙனம் பொருந்திய வீணாகச் சென்ற காலம்.


    அறையில் பெரிதாம் மல மாயை
    அலைய படும் ஆறு இனி ஆமோ
    அறையில் - சொல்லப் போனால். பெரிதாம் - எவ்வளவோ நீண்டது மல மாயை - மலத்தினும் மாயையினும் அலையப் படுமோ - அலைச்சல் உறும் இத் தீ நெறி. ஆமோ - இனிக் கூடாது.
    மறை அத்தனை மா சிறை சாலை
    வழி உய்த்து உயர் வான் உறு தேவர்
    மறை அத்தனை - வேதங்களுக்குத் தலைவனான பிரமனை. மா - பெரிய. சிறைச் சாலை - சிறைச் சாலைக்கு. வழி உய்த்து - போகும் வழியில் விட்டுப் போகும்படி வைத்து. வான் உறு தேவர் - வானத்தில் உள்ள தேவர்களின்.
    சிறையை தவிரா விடும் வேலா
    திலதை பதி வாழ் பெருமாளே.
    சிறையைத் தவிரா விடு - சிறையை நீக்கி விட்ட. வேலா - வேலனே. திலதைப் பதி வாழ் பெருமாளே - திலதைப் பதி என்னும் தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.

    சுருக்க உரை



    விளக்கக் குறிப்புகள்
    இட்டு உணல்....
    நித்தம் இருபிடி சோறு கொண் டிட்டுண்டிரு--- கந்தர் அலங்காரம்


    நாம் போம் அளவும் எமக்கென்னென்
    றிட்டுண் டிரும் —ஒளவையார் (நல்வழி)


    யாவர்க்குமாம் இறைவர்க் கொருபச்சிலை
    யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாய்அறுகு
    யாவர்க்குமாம் உண்ணும்போ தொருகைப்பிடி..... --- திரு மந்திரம்


    மறையத்தனை மா சிறை....
    பிரமனைமு னிந்து காவலிட்


    டொருநொடியில்.. ) ---திருப்புகழ் -கறைபடுமுடம்பி
Working...
X