279. சொரூபப் பிரகாச
279 திருவொற்றியூர்
தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன தனதானா
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச சுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவக்ரம மாதர்வயி றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை யதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி மருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர் குலகாலா
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ னருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு பெருமாளே
பதம் பிரித்து பொருள்
[ ] அடைப்பு குறிக்குள் இருப்பவை திரு நடராஜன் தந்த பொருள்
சுருக்க உரை
ரசபதி விரிவுரை
விளக்கக் குறிப்புகள்

பிரகாச சொரூபனே ஒளி உருவனே எல்லா அண்டங்களையும் கொண்ட பேருருவனே முழு முதற் பொருளாக நின்று உண்மையான சுகத்தைத் தரும் பொருளே இன்பப் பொருளே அழிவில்லாத சுத்த ஒளியே மதங்களின் தொந்தரவுகளைக் கடந்த வலிமையை உடையவனே
தாயின் வயிற்றில் கருவாக பிறக்காதபடி உனது திருவுருவில் விரும்பத் தக்க திருவடிகளைப் போற்றும் கீத வகைகளிலும் மேம்பட்டவனாய் விளங்கும் கருணை ஒளியே உனது திருவருளால் சிவ கதியைப் பெற்று, துன்பங்கள் யாவையும் கடக்க மாட்டேனோ? கோழிக் கொடியையும் ஒளி கொண்ட வேலையும் ஏந்திய திருக்கையினனே ஆதியே திருமால் மருகனே குமரனே கீர்த்தி விளங்கும் குகனே சுப்பிரமணியாகிய பேரொளியோனே ஆசை மிகுந்த அசுரர் குலத்துக்கு யமனே இலக்குமி சேர்ந்து பொருந்தியிருக்கும் திருவொற்றியூரில் கடல் அலைக்கு அருகில் வீற்றிருக்கும் ஆதி சிவன் அருளிய குழந்தையே யோகத்திலும் தவத்திலும் சிறந்த பெரிய தவசிகள் மனத்திலேயே பொருந்தி விளங்குபவனே சிவ கதி பெற்று இடர்கள் அனைத்தையும் கடக்க மாட்டேனோ?

1விப்பிரதேச
(புகலிக்கரசாகிய திருவளர் விப்பிரசிகாமணி) சம்பந்தர் ஆளுடை கலம்பகம் 6 (11 ஆம் திருமுறை) (வசுசெங்கல்வயராய பிள்ளை)
2 பிரமோத அடிகளை - விரும்பத் தக்க திருவடிகள்
3ஆதபயில் - ஆதப அயில் - வெயில் ஒளி கொண்ட வேல்
(புகலிக்கரசாகிய திருவளர் விப்பிரசிகாமணி) சம்பந்தர் ஆளுடை கலம்பகம் 6 (11 ஆம் திருமுறை) (வசுசெங்கல்வயராய பிள்ளை)
2 பிரமோத அடிகளை - விரும்பத் தக்க திருவடிகள்
3ஆதபயில் - ஆதப அயில் - வெயில் ஒளி கொண்ட வேல்