276.சதுரத்தரை
276திருவேட்களம்
(சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்கோயில் அமைந்துள்ளது)
தனதத்தன தாத்தன தானன
தனதத்தன தாத்தன தானன
தனதத்தன தாத்தன தானன தனதான
சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச்சிவ பாக்கிய நாடக அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக்குயில் மீட்டிய தோளொடு முகமாறுங்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
மயிலின்புற நோக்கிய னாமென
கருணைக்கடல் காட்டிய கோலமும் டியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
யவர்முத்தமி ழாற்புக வேபர
கதிபெற்றிட நோக்கிய பார்வையு மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
சிதறக்கட லார்ப்புற வேயயில் விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்தவி நாயகி
செகமிப்படி தோற்றிய பார்வதி யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
விகடத்துற வாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
விறல்மெய்த்திரு வேட்கள மேவிய பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள பூவோடு ஆக்கிய ஆறு ஆதார நிலைகளெல்லாம் தழைத்த சிவப் பேற்றைத் தரும் திருவடிக் கழலை எனக்குக் காட்டி, எனது ஆணவ மலம் தொலைய, உனது பன்னிரு தோள்களையும், ஆறு முகங்களையும், திருவடியையும் மயில் மீது வந்து அருளிய திருக் கோலத்தையும், முத்தமிழில் உன் புகழைப் பாடி, நான் நற்கதியைப் பெறவும் அருள் செய்ததை மறவேன்
மலைகள் பொடிபடவும், கடல் வற்றவும் வேலைச் செலுத்தியவனே, சிவனுடைய பத்தினியும், நமனை உதைக்கும் சக்தி வாய்ந்தவளும், அடியார்கள் இடர்களை நீக்குபவளும் ஆகிய பார்வதியின் மகனே திருமாலின் மருகனே சூரனுடன் போர் செய்து கோழிக் கொடியைக் கையிலேந்தி விளங்கும் பெருமாளே திருவேட்களம் என்னும் ஸ்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே நீ காட்சி அளித்ததை என்றும் மறவேன்

1 சிவபத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி
கூற்றுவனைக் காய்ந்தஅபிராமி மனதாரஅருள் கந்தவேளே
திருப்புகழ் -வாட்டியெனை
கூற்று மரித்திட வேயுதை பார்வதி
யார்க்கு மினித்தபெ ணாகிய மான்மகள் திருப்புகழ் ஏட்டின்விதி
யமனை உதித்தது தேவியின் கால்களே என்பது அருணகிரிநாதரின் கூற்று
2 செகமிப்படி தோற்றிய பார்வதி
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர் - திருப்புகழ் தொடத்துளக்கி
3 சூர்ப் பொருதாடிய கொடியைக் கொடு
சூரனுடைய இரு பிளவில் ஒன்று சேவலாகி வர, முருக வேள் அதனைக் கொடியாக நியமித்தார்