Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    275. வண்டுபோல்
    275திருவெஞ்சமாக்கூடல்
    (கருவூருக்கு அருகில் 19 கிமீ தொலைவில்)
    விக்ருதீஸ்வ்ரர் திருக்கோயிலில் வெஞ்சமாக் கூடற்பெருமான் பன்னிருகரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் வள்ளி தேவசேனையுடன் காட்சி அளிக்கிறான்
    தந்தனாத் தானத் தனதான
    வண்டுபோற் சாரத் தருள்தேடி
    மந்திபோற் காலப் பிணிசாடிச்
    செண்டுபோற் பாசத் துடனாடிச்
    சிந்தைமாய்த் தேசித் தருள்வாயே
    தொண்டராற் காணப் பெறுவேனா
    துங்கவேற் கானத் துறைவோனே
    மிண்டராற் காணக் கிடையோனே
    வெஞ்சமாக் கூடற் பெருமாளே



    பதம் பிரித்தல்

    வண்டு போல் சாரத்து அருள் தேடி
    வண்டு போல் - வண்டு எவ்வாறு
    சாரத்து - மலர்த் தேனை (நாடிப் பருகிக் களிக்கின்றதோ) அருள் தேடி - அவ்வாறு நான் உனது திருவருள் என்னும் தேனை நாடவும்


    மந்தி போல் கால பிணி சாடி




    மந்தி போல் - குரங்கு எவ்வாறு மரக் கிளைகளத் தாண்டித் திரிய வல்லதாய் இருக்கின்றதோ அவ்வாறு
    காலப் பிணி சாடி - யமன் என்னைப் பாசத்தினால் கட்டுவதை சாடி - தாண்ட வல்லவன் ஆகுமாறும்




    செண்டு போல் பாசத்துடன் ஆடி


    செண்டு போல் - செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகையை அது மாய்க்குமோ அவ்வாறு
    பாசத்துடன் ஆடி - நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும்


    சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே


    சிந்தை மாய்த்தே - என் மனத்தே நீ அழிய வைத்து
    சித்து அருள்வாயே - சும்மா இருக்கும்அறிவைஅருள்வாயே


    தொண்டரால் காண பெறுவோனே


    தொண்டரால் - அடியார்களால்
    காணப் பெறுவோனே - காணப் பெறும்படி இருப்பவனே


    துங்க வேற்கானத்து உறைவோனே
    துங்க - பரிசுத்தமான
    வேற்கானத்து - திருவேற்காடு என்னும் தலத்தில்
    உறைவோனே - வீற்றிருப்பவனே


    மிண்டரால் காண கிடையானே


    மிண்டரால் - ஆணவம் கொண்டவர்களால்
    காணக் கிடையானே - காணக் கூடாதவனே


    வெஞ்ச மா கூடல் பெருமாளே


    வெஞ்சமாக் கூடல் பெருமாளே - வெஞ்சமாக் கூடல் என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே



    சுருக்க உரை



    விளக்கக் குறிப்புகள்

    1 வண்டு போல் சாரத்து
    இறைவன் திருவருளைப் பெறுதற்கு வண்டு தான் சரியான தூது என்று புலவர்கள் வண்டு விடு தூது பாடுவார்கள் அந்த வண்டு போல உனது திருவருளை நாடிப் பருகி நான் களிக்க வேண்டும் என்பது கருத்து


    2 செண்டு - பிரம்பை போல் நுணி வளைந்திருக்கும் ஓர் ஆயுதம். பழங்கால தமிழர்களின் ஒரு போர் கருவி.


    இந்த ஆயுதத்தால் தான் உக்கிர பாண்டியன் மேரு மலையைப் புடைத்தது


    கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே –திருப்புகழ்


    ஐயனார்க்கு இந்த ஆயுதம் உண்டு. (கரங்களில் செண்டாயுதம் தரித்து வருவோனே போற்றி). மன்னார்குடி ராஜகோபால சுவாமி, மாயவரத்திற்கு அருகில் ஆறுபாதி என்னும் ஊரில் இருக்கும் ராஜகோபால ஸ்வாமி பெருமாள் கைகளில் செண்டு ஆயுத்தைதை வைத்திருக்க காணாலாம்


    3தொண்டரால் காணப் பெறுவேனோ


    பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர்
    காணும் காரோணத்தானே ...... சம்பந்தர் தேவாரம்
Working...
X