274. எருவாய் கருவாய்
274திருவீழிமிழலை
பூந்தோட்டத்திலிருந்து 6 கி.மீ தொலைவில்
தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனதான
எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா னருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் மருகனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் பெருமாளே.
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
முருகா வெனவோர்...
(முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்)--- கந்தர் அனுபூதி .
274திருவீழிமிழலை
பூந்தோட்டத்திலிருந்து 6 கி.மீ தொலைவில்

தனனா தனனா தனனா தனனா
தனனா தனனா தனதான
எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா னருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் மருகனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் பெருமாளே.
பதம் பிரித்து உரை

சுருக்க உரை
கருப்பத்தில் கருவாய்த் தோன்றி, உருவம் ஏற்பட்டு மாறி மாறித் தோன்றும், இவர் என்று சொல்லபட்டவர், இறந்த பின், அவர் என்றுசொல்லும்படியாக, பல கோடி தாய்மார்களை அடைந்தவனாய், வீணாகநான் அழியக் கூடாதவாறு அருளுக.
ஓரு முறை முருகா என்று ஓதுவார் தலைமேல் உன் திருவடிகள்
இரண்டையும் வைத்து அருள் பாலிப்பவனே. முனிவர்களும் அமரரும் முறையிட சூரன் மேல் வேல் எய்தியவனே. திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத சிவபெருமான் புதல்வனே. திருமால் மருகனே. முருகா, குமரா, என் உயிரைக் காப்பாயாக.