270. பகருமுத்தமிழ்
270திருவிடைக்கழி
(திருக்கடவூருக்கு அருகில் உள்ளது)
முருகன் கால் பதித்து நடந்த இடங்களில் இது ஒன்று திருகுரா மரத்தடியில்குமார சிவமாக அருள்பொழியும் ஸ்தலம் இஙகுள்ள கோயிலில் எல்லா மூர்ததங்களுமே சுப்பிரமணிய சொரூபமாக விளங்குகிறார்கள்
அற்புதப் பெருவாழ்வை வேண்டுகிறவர், தவப் பயனைத் தா என்று கேட்கிறவர் முத்தமிழின் பொருளும் வரமருளக் கேட்கிறார் இப்பாடலில்.
தனன தத்தனத் தனன தத்தனத்
தனன தத்தனத் தனதான
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத் தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க் குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப் பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

முத்தமிழ் நூல்களின் பொருளையும், பல வகையான வாழ்வையும், தவத்தால் பெறப்படும் பயனையும், முத்தி செல்வ நிலையையும் யாவரும் நண்பு வைத்துப் போற்றும் கற்பகத் தரு வாழ்க்கையையும், குற்றமற்ற அரச வாழ்க்கையையும், அற்புதமான சிறந்த வாழ்வையும், ஐம்புலன்களின் சேட்டைகள் நீங்கும்படி, அறிவின் பலத்தையும், நாவின் வன்மையையும் தந்தருள வேண்டும்
தக்க்ஷ யாகத்தில் தகர்க்கப்பட்டு அறுந்த போய் மீண்டும் பெற்ற கைகளைக் கொண்ட அக்கினி தேவனின் கைகள் தாங்காது கங்கையில் விட்டுவிட, சரவண மடுவில் இருந்தவனே, வள்ளி மலைக் காட்டில் தினைப்புனம் காத்த வள்ளியைத் தழுவிய மார்பை உடையவனே கிரௌஞ்ச மலையைப் பிளந்து, ஞானத்தையும் வெற்றியையும் கொண்ட ஒளி வீசும் வேலாயுதத்தை உடைய குமரேசா, குரா மரங்கள் நிறைந்த திருவிடைக் கழிப் பெருமாளே.