267.பாலோ தேனோ
267திருவாரூர்
தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன
தானா தானா தனதன தனதன தனதான
பாலோ தேனோ பலவுறு சுளையது
தானோ வானோர் அமுதுகொல் கழைரச
பாகோ வூனோ டுருகிய மகனுண வருண்ஞானப்
பாலோ வேறோ மொழியென அடுகொடு
வேலோ கோலோ விழியென முகமது
பானோ வானூர் நிலவுகொ லெனமகண் மகிழ்வேனை
நாலாம் ரூபா கமலஷண் முகவொளி
யேதோ மாதோம் எனதகம் வளரொளி
நானோ நீயோ படிகமொ டொளிரிட மதுசோதி
நாடோ வீடோ நடுமொழி யெனநடு
தூணேர் தோளோ சுரமுக கனசபை
நாதா தாதா எனவுரு கிடஅருள் புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
தாரா சூரா எனமுநி வர்கள்புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ எனவோதா
வாதா டூரோ டவுணரொ டலைகடல்
கோகோ கோகோ எனமலை வெடிபட
வாளால் வேலால் மடிவுசெய் தருளிய முருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
ஓதார் சீராள் கதிர்மதி குலவிய
தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் அருள்பாலா
தூயா ராயார் இதுசுக சிவபத
வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு
சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் பெருமாளே
பதம் பிரித்து உரை
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

பால், தேன், பலாச்சுளை, அமுதம், வெல்லப்பாகு தானோ, உள்ளம் உருகப் பாடிய ஞான சம்பந்தர் உண்ணும்படி உமா தேவியார் அருளிய ஞானப் பால் தானோ, வேறு ஏதாவதோ என்னும்படி இனிக்கும் பேச்சுக்களை உடைய விலை மாதர்களின் பால் மகிழும் நான், உன்னை நினைத்து, பல உருவம் கொண்டவனே, தாமரை போன்ற ஆறு முகத்தனே குற்றம் நிறைந்த உள்ளம் படைத்த என் மனதில் வளரும் சோதி ஒரு நாடோ அல்லது மோட்ச வீடோ உண்மையான உபதேசம் வேண்டும் எனக்கு நாதானே, கொடை வள்ளலலே என் மனம் உருகுமாறு திரு அருள் புரிவாயாக
தேவர்கள் பூமாரி பொழிய உலகில் தோன்றியவனே அரகர சிவசிவ என்று ஓதாமல் நின்ற அவுணர்களும், அலை கடலும், மலைகள் பொடிபட அவர்களை அழித்தவனே இலக்குமியும், சரஸ்வதியும் ஓதி நிற்கும் சீர் படைத்த உமா தேவி அருளிய முருகனே பரிசுத்தமானவர்கள் வாழும் திருவாரூரிலேயே தங்கி வாழ்வோம் என்ற ஞான உணர்ச்சியோடு சிறப்பு மிக்க திருவாரூரில் வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே நான் உள்ளம் உருகி உன்னைப் பாட அருள் புரிவாயாக

1 நாலாம் ரூபா
ஒன்றாய் இரு திறமாய்அளப்பிலவாய்
நின்றாய் சிவனேயிந் நீர்மை யெலாம் தீங்ககற்றி
நன்றாவி கட்கு நலம் புரிதற் கேயன்றே கந்த புராணம்
2 வானோர் மலர் மழை பொழியவ
அயனும் மாலும் வான்திகழ் மகத்தின் தேவும்
முநிவரும் மலர்கள் தூவி ஏன்றெமை அருளு கென்றே
ஏத்திசை எடுத்துச் சூழ்ந்தார் கந்த புராணம்