Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    265.ஊனாரு
    265திருவாடானை
    தேவகோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவில்
    மானாமதுரை- சிவகங்கை வழி
    தானான தத்ததன தானான தத்ததன
    தானான தத்ததன தனதான


    ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட
    ஊதாரி பட்டொழிய வுயிர்போனால்
    ஊரார்கு வித்துவர ஆவாவெ னக்குறுகி
    ஓயாமு ழக்கமெழ அழுதோய
    நானாவி தச்சிவிகை மேலேகி டத்தியது
    நாறாதெ டுத்தடவி யெரியூடே
    நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி
    நாடாதெ னக்குனருள் புரிவாயே
    மானாக துத்திமுடி மீதேநி ருத்தமிடு
    மாயோனு மட்டொழுகு மலர்மீதே
    வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
    வானோரு மட்டகுல கிரியாவும்
    ஆனாவ ரக்கருடன் வானார்பி ழைக்கவரு
    மாலால முற்றவமு தயில்வோன்முன்
    ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்
    ஆடானை நித்தமுறை பெருமாளே.





    பதம் பிரித்தல்



    ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா(து) கவித்த உடல்
    ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால்


    ஊன் = மாமிசமும் ஆரும் உள் பிணியும் = நிறைந்து உள்ளே இருக்கும் நோய்களும் ஆனா(து) = நீங்காமல் கவத்த = வளைய மூடப்பட்ட உடல் = (இந்த) உடல். ஊதாரி பட்டு ஒழிய = கேடுற்று நீங்கும்படி உயிர் போனால் = உயிர் போன பின்பு.




    ஊரார் குவித்து ஆவா என குறுகி
    ஓயா முழக்கம் எழ அழுது ஓய


    ஊரார் = ஊரில் உள்ளவர்கள் குவித்து வர = கும்புகூடி வர ஆவா என = ஐயோ என்று கூறி குறுகி = (அவர்கள்) அணுகி ஓயா முழக்கம் எழ = ஓய்வில்லாத கூச்சல் உண்டாகும்படி அழுது ஓய = அழுது, பின்னர் அழுகை அடங்க
    நானா வித சிவிகை மேலை கிடத்தி அது
    நாறாது எடுத்து அடவி எரி ஊடே


    நானா விதச் சிவிகை மேலே = பல விதமான பல்லக்கின்மேல் கிடத்தி = (பிணத்தைக்) கிடத்தி அது நாறாது = அந்த உடல் துர்நாற்றம் வீசுமுன் எடுத்து = எடுத்துக் கொண்டு போய் அடவி = சுடு காட்டில்எரி ஊடே = நெருப்பின் மத்தியில்.


    நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இப் பிறவி
    நாடாது எனக்கு உன் அருள் புரிவாயே


    நாணாமல் = கூசாமல் வைத்து விட = வைத்து விட நீறு ஆம் என் = சாம்பலாகும் என்ற விதி உள்ள இப்பிறவி = இந்தப் பிறவியை நாடாது = (நான்) விரும்பாதபடி. எனக்கு உன் அருள் புரிவாயே = உன்னுடய திருவருளைப் புரிவாயாக.


    மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு
    மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே


    மால் நாகம் = காளிங்கன் என்ற பெரிய பாம்பின் துத்தி = புள்ளிகள் உள்ள முடி மீதே = படத்தின் மேல் நிருத்தம் இடு = நடனம் செய்யும். மாயோனும் = மாயோனாகிய திருமாலும். மட்டு ஒழுகும் = தேன் சொரியும். மலர் மீதே = மலர் மேல்.


    வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டு திசையும்
    வானோரும் அட்ட குல கிரி யாவும்


    வாழ்வாய் இருக்கும் = வாழ்வு கொண்டிருக்கும்ஒரு வேதாவும் = ஒப்பற்ற பிரமனும் எண் திசையும் = எட்டுத் திசையில் உள்ளவர்களும் வானோரும் = தேவர்களும் அட்ட குல கிரி யாவும் = சிறந்த எட்டு மலைகளில் உள்ளவர்களும்
    ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும்
    ஆலாலம் உற்ற அமுது அயில்வோன் முன்


    ஆனா அரக்கர்கருடன் = (கடல் கடைந்த போது அங்கு) நீங்காது நின்ற அரக்கர்களுடன் வானார் பிழைக்க = வானகத்துள்ள கணங்கள் பிழைக்கும்படி வரும் = எழுந்த ஆலாலம் முற்ற = ஆலகால விடத்தை முழுவதும். அமுது அயில்வோன் முன் = அமுதமாக உண்ட சிவபெருமான் முன்பு


    ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தை அருள்
    ஆடானை நித்தம் உறை பெருமாளே.


    ஆசார பத்தியுடன் = ஆசாரத்துடனும் பக்தியுடனும் ஞான ஆகமத்தை = வேதாகமங்களின் ஞானப் பொருளை. அருள் = உபதேசித்து அருளிய பெருமாளே ஆடானை நித்தம் உறை = திருவாடானை என்னும் ஊரில் நாள் தோறும் வீற்றிருக்கும். பெருமாளே = பெருமாளே.





    சுருக்க உரை





    விளக்கக் குறிப்புகள்


    இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஆகமங்களை உப்தேசம் பண்ணிக் கொண்டிருப்பதாக ஒரு நம்பிக்கை. அதனால்தான் அருணகிருநாதர் “ஞான ஆகமதை” (ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தை அருள்) அருள ஆண்டவனை வேண்டுகிறார். -


    மானாக துத்திமுடி மீதே...


    திருமால் காளிங்கன் மீது நிர்த்தம் ஆடியதைக் கீழ்க்கண்ட திருப்புகழ்ப்
    பாடல்களில் காணலாம்.


    நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்
    நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்
    நகைமுக திருவுறை மணிமார்பன்------- நெச்சுப்பிச்சி.


    பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
    தாள்செகண சேசெ எனவோசை
    பாங்குபெறு தாள மேங்க மாடு
    பாண்டவர்ச காயன் மருகோனே-------மாந்தளிர்கள்.


    கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
    கொண்டுவளைத் தேமகிழ்ச் சுதனீண------------தும்பிமுகத்.
Working...
X