264. இபமாந்தர்
264திருவாஞ்சியம்
இத்தலத்தில் மயிலின் முகம் பெருமானின் இடப்பகம் உள்ளதால்
அசுரமயில் எனப்படுகிறது
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன
தனதாந்த தத்த தனதன தனதான
இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக
ளிடவாழ்ந்து திக்கு விசயம ணரசாகி
இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரி மளலேபந்
தபனாங்க ரத்த வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு வியபோது
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
தனவாஞ்சை மிக்கு னடிதொழ நினையாரே
உபசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை
யுருவோன்ப்ர சித்த நெடியவன் ரிஷிகேசன்
உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன் மருகோனே
த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்து னமுருக
திறல்பூண்ட சுப்ர மணியஷண் முகவேலா
திரைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சி யத்தி லமரர்கள் பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருக்க உரை
விளக்கக் குறிப்புகள்

யானை, காலாட்படை முதலியவற்றை உடைய பேரரசராக ஆட்சி
புரிந்து, திக்குவிசயம் செய்து, மண் உலகிற்கு அரசராகி, கலவைப் பூச்சும் ரத்ன அணிகலன்களையும் தன்னகத்தே கொண்ட மனித வடிவம்உடைய அது, உயிர் பிரிந்த பின், சுற்றத்தார் நெருப்பில் இட்ட பிறகு, ஒரு படி சாம்பலாகி விடுவர் என்பதை அறியாது பொருள் ஆசை மிகுந்து, உன் திருவடிகளைத் தொழ நினைக்க மாட்டார்கள்.
பாண்டவர்களுக்கு வரம் கொடுத்தவனும், உமா தேவிக்கு அண்ணனும், வட வேங்கடத்தில் உறைபவனும், சங்கு சக்ரத்தைக் கரத்தில் தாங்கியவனும் ஆகிய திருமாலின் மருகனே. திரி புரம் எரித்த சிவனுக்குப் புதல்வனே, ஷண்முகனே, வயலூர் அரசே, திருவாஞ்சியில் உறையும் தேவர்கள் பெருமாளே. நிலையாமையை உணர்ந்து உன் திருவடிகளைத் தொழ நினையாரே.

1. அரசாகி இறுமாந்து.....
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோருமுடிவிலொரு
பிடி சாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னுமிந்தப்
படி சார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னி னம்பலவர்
அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி வாரில்லையே
– பட்டினத்தார்
இறந்தால் ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே
- கந்தர் அலங்காரம்.
2. திருவாஞ்சியத்தில்....
நன்னிலம் அருகே உள்ள தலம். முத்தி அளிக்கும் தலங்களில் ஒன்று.
தில்லைவனங் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனங் கூடல் முதுகுன்றம் - நெல்லைகளர்
காஞ்சிகழுக் குன்றமறைக் காடருணைக் காளத்தி
வாஞ்சியமென் முத்தி வரும்.
கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திருவாஞ்சியத்து
அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே
---சம்பந்தர் தேவாரம்
திருப்பதி மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் கபிலேஸ்வரர் என்ற கோயில் உள்ளது. அங்கு ‘சுப்பிரமணிசுவாமிவாரு’ சன்னதி உள்ளது. அருணகிரியார் அவரைத்தான் ‘‘வடவேங்கடத்துள் உறைபவன் மருகன்’ என்று சொல்லுகிறாறோ?